AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3,000 வரை விலை உயர்த்தும் லாவா.. பயனர்களுக்கு ஷாக்!

Lava Hikes Smartphone Prices In India | மெமரி சிப்களின் பற்றாக்குறை காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தி வருகின்றன. அந்த வகையில், லாவா நிறுவனமும் தனது ஸ்மார்ட்போனின் விலைகளை அதிரடியாக உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3,000 வரை விலை உயர்த்தும் லாவா.. பயனர்களுக்கு ஷாக்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 Nov 2026 00:12 AM IST

ஸ்மார்ட்போன் (Smartphone) துறைக்கு 2026 ஆம் ஆண்டு மிகவும் சவால் மிகுந்த ஆண்டாக இருந்து வருகிறது. காரணம், உலக அளவில் ஏற்பட்டுள்ள மெமரி சிப்களின் (Memory chip) பற்றாக்குறை காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் விலையை உயர்த்தும் சூழலுக்கு தள்ளப்படுகின்றன. ஏற்கனவே ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung) உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தி அறிவித்துள்ளன. அந்த பட்டியலில் தற்போது லாவாவும் (Lava) இணைந்துள்ளது.

அதாவது லாவா நிறுவனமும் தங்களது ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3,000 வரை விலை உயர்த்த உள்ளதாகவும், இந்த விலை உயர்வு நவம்பர் 15, 2026 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஸ்மார்ட்போன் விலை உயர்வு குறித்து லாவா கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3,000 வரை விலை உயர்த்தும் லாவா

செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தின் வளர்ச்சியால் ஸ்மார்ட்போன் துறை மெமரி சிப்களின் பற்றாக்குறையை எதிர்க்கொண்டுள்ளது. இதன் காரணமாக பல முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தி வருகின்றன. அந்த வகையில் தான், லாவா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களின் விலைகளை ரூ.3,000 வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், அந்த நிறுவனம் எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு விலை உயர்த்தப்போகிறது என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.

இதையும் படிங்க : வாட்ஸ்அப் குரூப்பில் 4 புதிய அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்யும் மெட்டா.. என்ன என்ன தெரியுமா?

விலை உயர்த்திய வேறு சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்

சாம்சங் தனது கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை இந்தியாவில் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு செப்டம்பர் 23, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதாவது, சாம்சங் தனது ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை விலையை உயர்த்தியுள்ளது. இதேபோல ஆப்பிள் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதாவது, ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை கடும் விலை உயர்வுடன் அறிமுகம் செய்தது.

இதையும் படிங்க : சீனா அறிமுகம் செய்த புதிய பாம்பு ரோபோட்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன.. வியக்க வைக்கும் புதிய படைப்பு!

இதேபோல ஒன்பிளஸ் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை உயர்த்தியது. ஓப்போ, விவோ, ரியல்மி உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போனின் விலைகளை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us