திருப்பத்தூரில் அதிர்ச்சி.. என்ஜின் இன்றி 6 கி.மீ. பயணித்த ரயில் பெட்டிகள்.. தடம்புரண்டு விபத்து.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
Tirupattur Railway Carriages Derailed : திருப்பத்தூர் மாவட்டத்தில் ரயில் என்ஜின் இன்றி ரயில் பெட்டிகள் மட்டும் சு மார் 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு தனியாக பயணித்தது. அத்துடன் அந்த ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து நேரிட்டது .
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சந்திப்பு 16 பிளாட்பார்ம்கள் கொண்ட மிகப்பெரிய ரயில்வே மையமாகும். இங்கு உள்ள ரயில் பெட்டிகள் பராமரிப்பு யார்டில் பழுது பார்க்கும் பணிக்காக 7 காலி ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பெட்டிகளை ஒரு எஞ்சின் மூலம் தள்ளி வேறு பகுதிக்கு மாற்றும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, பணியில் இருந்த ஊழியர்கள் அந்த பெட்டிகளை முறையாக கட்டுப்படுத்தாமலும், பெட்டிகளின் சக்கரங்களில் பாதுகாப்பு பிடிப்பான்கள் மாட்டி நிறுத்தாமலும் அலட்சியத்துடன் செயல்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக 7 காலி ரயில் பெட்டிகளும் தண்டவாளத்தில் நகர்ந்து செல்ல தொடங்கியது. அவை யார்டின் எல்லைகளை கடந்த நிலையில் பெங்களூர்- ஜோலார்பேட்டை பிரதான ரயில் பாதையில் எஞ்சின் இல்லாமலேயே அதிவேகத்தில் சென்றது.
6 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்ற ரயில் பெட்டிகள்
சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிற்கு அந்த ரயில் பெட்டிகள் தறிகட்டு ஓடியது. தமலேரி முத்தூர் என்ற பகுதி அருகே ரயில் பெட்டியில் சென்றபோது பயங்கர சத்தத்துடன் ரயில் தண்டவாளத்தை விட்டு பெட்டிகள் தடம் புரண்டு கீழே இறங்கின. இந்த சத்தத்தை கேட்ட அங்கு பணியில் இருந்த ரயில்வே கேட் கீப்பர் அதிர்ச்சி அடைந்தார். ஆபத்தை உணர்ந்த அவர் உடனடியாக ஜோலார்பேட்டை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு அவசர தகவல் தெரிவித்தார்.
மேலும் படிக்க: என் மகள் உயிருடன் வருவாள்.. தீபாவளி புத்தாடையுடன் காத்திருக்கும் தாய்.. செஞ்சியில் கண் கலங்க வைக்கும் சோகம்!
ரயில்வே கேட் கீப்பரால் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு
இதன் காரணமாக சென்னை- பெங்களூர் வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த அனைத்து ரயில்களும் ஆங்காங்கே அவசர அவசரமாக நிறுத்தப்பட்டன. கேட் கீப்பரின் இந்த துரித நடவடிக்கை காரணமாக ரயில் விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே பொறியாளர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் நின்ற ரயில் பெட்டிகளை அகற்றும் முயற்சிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர்.
#WATCH | Tirupattur district, Tamil Nadu: Seven empty railway coaches without an engine, which were reportedly left unattended at the railway yard of Jolarpettai Junction, rolled away and travelled nearly 6 kilometres before derailing on the main railway track near Thamaleri Muthur. Using gas-cutting equipment, the connecting portions of the coaches were separated, and JCB machinery was deployed to push the coaches away from the railway tracks.
Due to the incident, several trains operating between Bengaluru and Chennai were delayed.
— ANI (@ANI) November 2, 2026
போர்க்கால அடிப்படையில் தடம்புரண்ட பெட்டிகள் அகற்றம்
இதில், கேஸ் கட்டிங் கருவிகள் மூலமாக ரயில் பெட்டிகளின் இரும்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பிரிக்கப்பட்டது. பின்னர் பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம், பெங்களூர்- சென்னை வழித்தடத்தில் இயங்கும் பல்வேறு ரயில்களின் சேவைகளை பாதித்தது. இதன் காரணமாக திட்டமிடப்பட்ட ரயில் சேவைகளின் தாமதங்கள் ஏற்பட்டன. அத்துடன் பயணிகள் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: எனக்கு எண்டு கார்டே கிடையாது.. யாராலும் அழிக்கவும் முடியாது.. முன்பை விட அதிக நகைகளுடன் ரீல்ஸ் பதிவிட்ட மதுமிதா!