என் மகள் உயிருடன் வருவாள்.. தீபாவளி புத்தாடையுடன் காத்திருக்கும் தாய்.. செஞ்சியில் கண் கலங்க வைக்கும் சோகம்!
Gingee Girl Missing : விழுப்புரம் மாவட்டத்தில் காணாமலை போன சிறுமிக்கு அவரது தாய் பவானி தீபாவளி பண்டிகைக்காக புத்தாடை எடுத்து வைத்து காத்துக் கொண்டிருக்கிறார். அவர் எனது மகள் நிச்சயம் உயிரோடு வருவார் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார் .
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 7 வயதில் சிறுமி ஹேமலதா என்ற ஹேமாவதி கடந்த அக்டோபர் மாதம் 12- ஆம் தேதி மாயமானார். அவர் காணாமல் போய் இன்றுடன் 22 ஆட்கள் ஆகிறது. இந்த வழக்கில் உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கை கையில் இருந்து இன்றுடன் 12 நாட்கள் முடிவடைந்து விட்டது. தற்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால், மகளை இழந்த பெற்றோர் கடும் மன வேதனை அடைந்துள்ளனர்.
காணாமல் போன சிறுமிக்கு தீபாவளி புத்தாடை எடுத்த தாய்
இந்த நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், காணாமல் போன தனது மகள் ஹேமலதாவுக்கு புத்தாடை எடுத்து காத்திருக்கிறார் அவரது தாய் பவானி. இது தொடர்பாக அவர் கூறுகையில், எனது மகள் நிச்சயம் உயிருடன் வருவாள் என்ற மாறாத நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். எங்கம்மா போன நீ.. உனக்காக தீபாவளி புத்தாடை வாங்கி வைத்துள்ளேன் என்று தெரிவித்தார். அத்துடன் வீட்டின் படுக்கை அறையில் மகளின் படத்தை பார்த்தவாறு தாய் கண்ணீருடன் காத்து இருக்கிறார்.
மேலும் படிக்க: ரூ.5 கோடி பேரம் பேசிய விவகாரம்.. சிக்குகிறாரா அமைச்சர் ராஜ்மோகன்? லஞ்ச ஒழிப்பு துறையில் பரபர புகார்!




சிறுமி காணாமல் போய் 22 நாள்கள் ஆகிறது
ஒவ்வொரு ஆண்டும் தனது மகளுக்கு தீபாவளி திருநாளில் புத்தாடை எடுத்துக் கொடுப்பதை போல இந்த ஆண்டும் தீபாவளிக்கு புதிய ஆடையை பவானி வாங்கி வைத்துள்ளார். சிறுமி காணாமல் சென்று 22 நாட்கள் ஆகும் நிலையில், நேற்று ஆலமூட்டி பகுதியில் செயல்பாட்டில் இருந்த 3 செல்போன் டவர்களில் இருந்து தகவல்களை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர். கடந்த அக்டோபர் 11- ஆம் தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை செல்போன் டவரில் 600 அழைப்புகள் பதிவாகி இருந்தது.
சந்தேகத்துக்குரியவர்களிடம் போலீசார் விசாரணை
இந்த அழைப்புகளை மேற்கொண்ட 600 பேரையும் சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், ஆலம்பூண்டியை சேர்ந்த டிராக்டர் ஓட்டுனரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் சிறுமியின் பெற்றோர், உறவினர் மற்றும் சந்தேகத்துக்குரிய நபர்களிடமும் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமி காணாமல் போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் தற்போது வரை இந்த துப்பும் கிடைக்காததால் சிறுமையின் பெற்றோர் மிகுந்த சோகத்துக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் படிக்க: ரூ.100 கோடி லஞ்சம்.. சிசிபி போலீஸ் விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி!