AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கர்நாடகாவில் இருந்து சென்னைக்குக் கடத்தப்பட்ட 71 டன் ரேஷன் அரிசி – 2 லாரி ஓட்டுநர்கள் கைது!

Ration Rice Smuggling: இரண்டு லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில், இரண்டு லாரிகளிலும் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் அரிசி ஏற்றப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், லாரிகளில் இருந்த அரிசி மூட்டைகளைச் சோதனையிட்டபோது அவை ரேஷன் அரிசி என்பது உறுதி செய்யப்பட்டது.

கர்நாடகாவில் இருந்து சென்னைக்குக் கடத்தப்பட்ட 71 டன் ரேஷன் அரிசி – 2 லாரி ஓட்டுநர்கள் கைது!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Nov 2026 19:33 PM IST

நவம்பர் 2, 2026: கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரிகள் மூலம் வேலூர் வழியாக சென்னைக்குக் கடத்தப்பட்ட 71 டன் ரேஷன் அரிசியை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக இரண்டு லாரி ஓட்டுநர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகன தணிக்கையில் சிக்கிய ரேஷன் அரிசி:

கர்நாடக மாநிலத்தில் இருந்து இரண்டு லாரிகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு, வேலூர் வழியாக சென்னைக்குக் கடத்தப்படுவதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி சந்தோஷ் குமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் போலீசார் காட்பாடியை அடுத்த பொன்னை – திருவலம் நான்கு வழிச்சாலையில், மேல்பாடி மேம்பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: மது பிரியர்களுக்கு உற்சாக அறிவிப்பு.. தீபாவளிக்கு அறிமுகமாகும் 20 வகை மதுபானம்- 4 வகை பீர்கள்.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி!

அப்போது அந்த வழியாக வந்த இரண்டு லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில், இரண்டு லாரிகளிலும் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் அரிசி ஏற்றப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், லாரிகளில் இருந்த அரிசி மூட்டைகளைச் சோதனையிட்டபோது அவை ரேஷன் அரிசி என்பது உறுதி செய்யப்பட்டது.

71 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

இதனைத் தொடர்ந்து, இரண்டு லாரிகளின் ஓட்டுநர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் ராணிப்பேட்டை தாங்கள் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் ராணிப்பேட்டை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தங்கமணி என்பது தெரியவந்தது.

மேலும், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காருபேட்டையில் உள்ள அரிசி ஆலைகளில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்திற்குச் செல்வதாகவும், லாரிகளில் ஏற்றப்பட்டிருந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: அரசு உத்தரவை மீறி கடையடைப்பு.. டாஸ்மாக் பணியாளர்கள் 160 பேர் கூண்டோடு சஸ்பெண்ட.. நிர்வாகம் அதிரடி!

இதையடுத்து, இரண்டு லாரிகளிலும் இருந்த மொத்தம் 1,420 மூட்டைகளில் இருந்த 71 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட அரிசி திருவள்ளூர் நுகர்வோர் வாணிபக் கிடங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஓட்டுநர்கள்

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இரண்டு லாரி ஓட்டுநர்களையும் கைது செய்தனர். கர்நாடகாவில் இருந்து ரேஷன் அரிசி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us