AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மது பிரியர்களுக்கு உற்சாக அறிவிப்பு.. தீபாவளிக்கு அறிமுகமாகும் 20 வகை மதுபானம்- 4 வகை பீர்கள்.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி!

TASMAC New Varieties Liquor Introduced : தீபாவளி பண்டிகையையொட்டி, டாஸ்மாக் கடைகளில் 20 வகையான மதுபானங்கள் மற்றும் 4 வகையான பீர் வகைகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மது பிரியர்களுக்கு உற்சாக அறிவிப்பு.. தீபாவளிக்கு அறிமுகமாகும் 20 வகை மதுபானம்- 4 வகை பீர்கள்.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 02 Nov 2026 18:53 PM IST

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையில் மது பிரியர்களை மேலும் உற்சாகமாக்கும் வகையில் 20 புதிய மதுபானங்கள் மற்றும் 4 புதிய ரக பீர்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள் மற்றும் எலைட் கடைகளில் மொத்தம் 800- க்கும் மேற்பட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், தீபாவளி பண்டிகை காலத்தில் மது விற்பனையை அதிகரிக்கும் வகையில் அதிகாரிகள் தரப்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், புதிதாக 20 மதுபான வகைகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது.

புதிதாக 4 பீர் வகைகள் அறிமுகம்

இதன் மூலமாக தற்போது புழக்கத்தில் இருக்கும் பீர் ரகங்களின் எண்ணிக்கை 25- ஆக உயர உள்ளது. அதன்படி, புதிதாக விற்பனை செய்யப்பட உள்ள 4 பீர் ரகங்களும் வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளன. இதில்.

மேலும் படிக்க: அரசின் உத்தரவை மீறியதால் நடவடிக்கை.. 3 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்.. அமைச்சர் விக்னேஷ்!

  • கர்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹெய்னகென் சில்வர்.
  • பிர்ரா.
  • லோன் உல்ப்.
  • சத்தீஸ்கரின் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிம்ப ரோர்.

புதிய பீர் விலை எவ்வளவு தெரியுமா

ஆகிய 4 வகைகள் டாஸ்மாக் பட்டியலில் இணைக்கின்றன. இந்த புதிய பீர் கிரகங்களின் ஆரம்ப விலை குறைந்தபட்சம் ரூ. 250- ஆக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. தீபாவளி பண்டிகையையொட்டி, முதல் கட்டமாக இந்த புதிய பீர் ரகங்கள் அனைத்தும் டாஸ்மாக்கின் எலைட் மதுபான கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

20 வகையான மது பானங்கள் அறிமுகம்

பொதுவாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிக அளவு கூட்டம் காணப்படும். தற்போது, 20 வகையான மதுபானங்கள் மற்றும் 4 வகையான பீர் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் கூட்டம் இதைவிட அதிகரிக்கும் எனவும், டாஸ்மாக் விற்பனை புதிய உச்சத்தை தொடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உள்ளூர் மதுபான ஆலைகளில் தயாரிக்கப்படும் விஸ்கி, ஓட்கா, பிராந்தி, ஜின், ரம் மற்றும் பீர் வகைகள் மட்டும் இன்றி பிற மாநிலங்களில் இருந்தும் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனையில் 21 வகை பீர் வகைகள்

தற்போது, டாஸ்மாக் கடைகளில் பிரிட்டிஷ் எம்பயர், ஸ்பீல் ட்ரிபிள் ஸ்ட்ராங், கிங்பிஷர், பிளாக் பேர்ல், எஸ். என். ஜே., 10000, கல்யாணி பிளாக் லேபிள், மேக்ஸ் 11000, ஹேவர்ட்ஸ் 5000, பிளாக் பஸ்டர், புல்லட், வுட்பெக்கர், ஜிங்காரோ, கார்ல்ஸ்பெர்க், பட்வைசர் டியூபார்க், உள்ளிட்ட 21 பீர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. நாளை காலை சிறப்பு ரயில் முன்பதிவு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

Follow Us