AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசு உத்தரவை மீறி கடையடைப்பு.. டாஸ்மாக் பணியாளர்கள் 160 பேர் கூண்டோடு சஸ்பெண்ட.. நிர்வாகம் அதிரடி!

TASMAC Employees Suspend : தமிழகத்தில் அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட 900 டாஸ்மாக் பணியாளர்களுக்கு மெமோ வழங்கப்பட்ட நிலையில் 160 பேரை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது .

அரசு உத்தரவை மீறி கடையடைப்பு.. டாஸ்மாக் பணியாளர்கள் 160 பேர் கூண்டோடு சஸ்பெண்ட.. நிர்வாகம் அதிரடி!
கோப்பு புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 02 Nov 2026 17:55 PM IST

தமிழகத்தில் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி டாஸ்மாக் கடைகளை மூடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 160 பேரை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 4,040 டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் மது பிரியர்கள் அதனை அருந்திவிட்டு காலி பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடையில் ஒப்படைப்பவர்களுக்கு ரூ. 10 வழங்கப்படுகிறது. இந்த பணம் முன்பு எம். ஆர். பி. விலையுடன் சேராமல் தனியாக பெறப்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த 10 ரூபாயை எம். ஆர். பி. விலையுடன் சேர்த்து வசூலிக்கவும், ரூ. 1000- க்கு மேல் மது பானங்கள் வாங்கும் மது பிரியர்களிடம் கியூஆர் குறியீடு மூலமாக பணம் இல்லா பரிவர்த்தனை மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டிருந்தது.

காலி மதுபாட்டில்களை ஸ்கேன் செய்யும் இயந்திரம்

அத்துடன், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும்போது, அவற்றை ஸ்கேன் செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், ஒரு கடைக்கு 2 ஸ்கேனிங் இயந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்ட காரணத்தால், புதிய நடைமுறைகளால் விற்பனையில் காலதாமதம் ஏற்படுவது உடன், பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலமாக பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.

மேலும் படிக்க: ‘ரிவர்ஸ் கியரில்’ வேகமாக செல்லும் தவெக அரசு.. முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்!!

கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டம்

கூடுதல் ஸ்கேனிங் இயந்திரங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை பணியாளர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னறிவிப்பு இன்றி திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அத்துடன், டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டதற்கு எதிராக கடைகளை அடைத்து இருந்தனர். இதனால், முன் அறிவிப்பு இன்றி டாஸ்மாக் கடைகளை திறக்காத 960 பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு டாஸ்மாக் நிர்வாகம் நேத்து ஞாயிற்றுக்கிழமை மெமோ அனுப்பி இருந்தது.

மெமோ வழங்கிய 900 பேரில் 160  பணியாளர்கள் சஸ்பெண்ட்

இந்த நிலையில், மெமோ வழங்கியவர்களில் 160 பேர் மீது டாஸ்மாக் நிர்வாகம் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இதில், 160 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இன்று திங்கள் கிழமை டாஸ்மாக் கடைகளை திறக்காத பணியாளர்களுக்கும் மீண்டும் மெமோ வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: “தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் காலி மதுபாட்டில்கள்தான்!”.. 20 நாட்களில் புதிய இயந்திரங்கள் அமல்.. அமைச்சர் விக்னேஷ்

Follow Us