AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மாநில உரிமைகளை பாதுகாப்பதில் திமுகவை விட தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது – அமைச்சர் வன்னி அரசு பேட்டி!

Minister Vanni Arasu About TVK Government: மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் கடந்த திமுக அரசைக் காட்டிலும் தமிழக வெற்றிக் கழக அரசு சிறப்பாகவே செயல்பட்டு வருவதாக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழக ஆட்சி சிறப்பாக நடைபெறுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

மாநில உரிமைகளை பாதுகாப்பதில் திமுகவை விட தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது – அமைச்சர் வன்னி அரசு பேட்டி!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Nov 2026 15:48 PM IST

நவம்பர் 2, 2026: சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வன்னி அரசு, மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் கடந்த திமுக ஆட்சியைக் காட்டிலும் தமிழக வெற்றிக் கழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பாமக அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு, பாஜகவின் செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசின் மாநில உரிமை சார்ந்த நடவடிக்கைகள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பாமக மீது தனிப்பட்ட வெறுப்பு கிடையாது!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, பாட்டாளி மக்கள் கட்சி அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக தங்களது நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டதாகக் குறிப்பிட்டார். அதற்காக பாமகவை வெறுக்கிறோம் என்று அர்த்தம் கிடையாது என்றும், கோட்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: புதிய தலைமை செயலகம்.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அரசு எடுத்த முடிவு.. பட்டினப்பாக்கத்தில் என்ன நடக்கிறது?

பாமக எப்போதுமே தாங்கள் நேசிக்கின்ற கட்சிதான் என்றும், சனாதன மற்றும் சாதிய அரசியலைத் தூக்கிப் பிடிப்பதை மட்டுமே எதிர்ப்பதாகவும் கூறினார். ராமதாஸ், அன்புமணி, சௌமியா ஆகியோர் மீது தனிப்பட்ட முறையில் தங்களுக்கு எந்தவித வெறுப்பும் கிடையாது என்றும் அவர் விளக்கமளித்தார்.

ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சியில் பாஜக!

நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டிய வன்னி அரசு, தேர்தல் ஆணையத்தின் மூலம் ஜனநாயக நடைமுறைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்பதை திமுக நன்கு அறியும் என்றும், பாஜகவுக்கு எதிராக ஏற்கெனவே போராட்டங்களை நடத்தியவர்கள் தற்போது ஏன் போராடவில்லை என்பது தெரியவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க: ரூ.100 கோடி லஞ்சம்.. சிசிபி போலீஸ் விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி!

அதேநேரத்தில், திமுக போராடவில்லை என்பதற்காக அக்கட்சி பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறது என்று தான் கூற விரும்பவில்லை என்றும், ஜனநாயகத்திற்காகவும் தமிழக மண்ணின் உரிமைகளுக்காகவும் அவர்கள் போராடுவது நல்லது என்றும் தெரிவித்தார்.

திமுக ஆட்சியை விட தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது!

மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் கடந்த திமுக அரசைக் காட்டிலும் தமிழக வெற்றிக் கழக அரசு சிறப்பாகவே செயல்பட்டு வருவதாக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழக ஆட்சி சிறப்பாக நடைபெறுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

தனிக்கொடி விவகாரத்தில் விசிகவுக்கு மாற்றுக் கருத்து இல்லை!

மாநில உரிமைகள் தொடர்பாகப் பேசிய அவர், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்.  அதேபோல், ஒரு மாநிலத்திற்கென தனிக்கொடி இருப்பது தவறான கருத்து கிடையாது என்றும், இந்த விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.

 

Follow Us