AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

50 வயதுக்கு மேல் பெண்களே உஷார்! எலும்பு முறிவு அபாயத்தை முன்கூட்டியே கண்டறியலாம்

Bone Fracture Risk: 50 வயதைக் கடந்த பெண்களில் மூன்றில் ஒருவருக்கு எலும்பு அடர்த்தி குறைபாடு காரணமாக எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை முன்கூட்டியே கண்டறிய வயது, உடல் எடை, குடும்பப் பின்னணி உள்ளிட்ட எட்டு காரணிகளின் அடிப்படையில் புதிய ஸ்கோர்கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிக அபாயம் இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று எலும்பு அடர்த்திப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

50 வயதுக்கு மேல் பெண்களே உஷார்! எலும்பு முறிவு அபாயத்தை முன்கூட்டியே கண்டறியலாம்
பெண்கள் நலம்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 02 Nov 2026 16:30 PM IST

50 வயதைக் கடந்த இந்தியப் பெண்களில் மூன்றில் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்படும் (Bone Fracture Risk ) அபாயம் உள்ளது. ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பால் எலும்புகளின் அடர்த்தி குறைந்து அவை வலுவிழக்கின்றன. மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் இந்தப் பாதிப்பு அதிகரிக்கிறது. ஆரம்பத்தில் அறிகுறிகள் தென்படாததால் பலருக்கு எலும்பு பாதிப்பு இருப்பது தாமதமாகவே தெரியவருகிறது. இதனை முன்கூட்டியே கண்டறிய இந்திய ஆஸ்டியோபோரோசிஸ் சங்கம் புதிய ஸ்கோர்கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. வயது, உடல் எடை, குடும்பப் பின்னணி, புகைப்பழக்கம் உள்ளிட்ட எட்டு காரணிகளின் அடிப்படையில் அபாயம் கணக்கிடப்படுகிறது.

Also Read: நாட்டையே ஒளிர வைக்கும் சிவகாசி பட்டாசுத் தொழிலின் பின்னணி என்ன?

பெண்களின் எலும்பு ஆரோக்கியம்

இந்தியாவில் 50 வயதைக் கடந்த பெண்களில் மூன்றில் ஒருவருக்கு ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பாதிப்பு காரணமாக எலும்புகள் வலுவிழந்து, சிறிய தடுமாற்றம் அல்லது கீழே விழுவது போன்ற சாதாரண நிகழ்வுகளில்கூட எலும்பு முறிவு ஏற்படலாம். குறிப்பாக, மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு குறைவதால் பெண்களுக்கு எலும்பு அடர்த்தி இழப்பு வேகமாக அதிகரிக்கிறது.

அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கும் நோய்

ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஆரம்பத்தில் வெளிப்படையான அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை. எலும்பு முறிவு ஏற்படும் நிலையில்தான் பலருக்கு இந்தப் பாதிப்பு இருப்பது தெரியவருகிறது. இந்தியாவில் சுமார் 22.9 சதவீதம் பேருக்கு இந்தப் பிரச்சினை இருப்பதாகவும், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பெண்கள் இதனால் ஏற்படும் எலும்பு முறிவுகளைச் சந்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய எலும்பு ஆரோக்கிய ஸ்கோர்கார்டு

இந்தப் பாதிப்பை முன்கூட்டியே கண்டறியும் நோக்கில், இந்திய ஆஸ்டியோபோரோசிஸ் சங்கம் புதிய எலும்பு ஆரோக்கிய ஸ்கோர்கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. வயது, உடல் நிறை குறியீடு (BMI), குடும்பத்தில் எலும்பு நோய் பாதிப்பு, ஏற்கெனவே உள்ள உடல்நலப் பிரச்சினைகள், புகைப்பழக்கம், ஸ்டீராய்டு மருந்துகள் மற்றும் சில புற்றுநோய் சிகிச்சைகள் உள்ளிட்ட எட்டு காரணிகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்படுகிறது.

எப்படி அபாயத்தைக் கண்டறியலாம்?

இந்த ஸ்கோர்கார்டில் ஒவ்வொரு காரணிக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கப்படும். அவற்றைக் கூட்டி மொத்த மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. பூஜ்ஜியம் முதல் 3 வரை குறைந்த அபாயத்தையும், 12-க்கு மேல் மிக அதிக அபாயத்தையும் குறிக்கிறது. 40 வயதுக்குப் பிறகு சாதாரணமாக ஏற்படும் சிறிய விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தாலும், அவர்கள் அதிக அபாயப் பிரிவில் சேர்க்கப்படுவார்கள்.

Also Read: நாட்டையே ஒளிர வைக்கும் சிவகாசி பட்டாசுத் தொழிலின் பின்னணி என்ன?

யாருக்கு கூடுதல் பரிசோதனை தேவை?

அதிக அபாயம் இருப்பதாகக் கண்டறியப்படுபவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி DEXA ஸ்கேன், எலும்பு அடர்த்திப் பரிசோதனை மற்றும் கால்சியம், வைட்டமின் டி உள்ளிட்ட ரத்தப் பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்.  இந்த ஸ்கோர்கார்டு நோயைக் கண்டறியும் இறுதிப் பரிசோதனை அல்ல. ஆரம்பகட்ட அபாய மதிப்பீட்டுக் கருவி மட்டுமே. எனவே, மதிப்பெண் குறைவாக இருந்தாலும் எலும்பு பாதிப்பு இல்லை என்று உறுதியாகக் கூற முடியாது. மருத்துவ ஆலோசனையும் தேவையான பரிசோதனைகளும் அவசியம்.

Follow Us