AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இளம் பெண்களை அச்சுறுத்தும் வைட்டமின் டி குறைபாடு! காரணம் என்ன?

Vitamin D Deficiency: இங்கிலாந்தில் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே வைட்டமின் டி குறைபாடு அதிகரித்து வருவதுடன், இது எலும்புகளைப் பலவீனப்படுத்தும் அமைதியான நோயாக உருவெடுத்துள்ளது. சஸ்கியா மற்றும் அமகா போன்ற ஆரோக்கியமான இளம் பெண்களை இது திடீர் மயக்கம் மற்றும் தீவிர சோர்வு மூலம் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இளம் பெண்களை அச்சுறுத்தும் வைட்டமின் டி குறைபாடு! காரணம் என்ன?
வைட்டமின் டிImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 31 Oct 2026 11:00 AM IST

இங்கிலாந்தில் உள்ள இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே வைட்டமின் டி குறைபாடு (Vitamin D Deficiency) ஆபத்தான அளவில் அதிகரித்து வருவது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. வாரத்திற்கு நான்கு முறை கால்பந்து விளையாடும் 23 வயதான சஸ்கியா ரீவ்ஸ்-ப்ரீஸ்ட்லி மற்றும் மாணவி அமகா போன்ற ஆரோக்கியமான இளைஞர்கள் கூட திடீர் மயக்கம் மற்றும் சோர்வு ஏற்பட்டு இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எலும்புகளை மென்மையாக்கி எளிதில் உடையும் நிலைக்குத் தள்ளும் இந்த குறைபாடு ‘அமைதியான நோய்’ என்று மருத்துவர்களால் வர்ணிக்கப்படுகிறது. எளிதில் கண்டறிய முடியாத இதன் அறிகுறிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதால் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படுவது அவசியமாகிறது. இந்தச் சிக்கல் இளம் வயதிலிருந்து தொடங்கி கர்ப்பக் காலம் மற்றும் பிற்கால சந்ததிகளையும் பாதிக்கும் ஒரு வாழ்நாள் குறைபாடாக மாறக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Also Read: காலையில் 30 நிமிடங்கள் போதும்.. இந்த 4 பழக்கங்கள் உங்களை ஆரோக்கியமாக மாற்றும்!

தலை சுற்றல் மற்றும் பலவீனம்: சஸ்கியாவின் அதிர்ச்சி அனுபவம்

23 வயதான சஸ்கியா ரீவ்ஸ்-ப்ரீஸ்ட்லி (Saskia Reeves-Priestley) என்ற சிறப்பு கல்வி ஆசிரியை, வாரத்திற்கு நான்கு முறை கால்பந்து விளையாடும் உடல் தகுதியுடன் இருந்தபோதிலும், வேலையின் போது திடீரென மயங்கி விழுந்தார். தனக்கு ஏற்பட்ட தீவிரமான தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்ற அறிகுறிகளால் தனது உடலில் ஏதோ கோளாறு இருப்பதை அவர் உணர்ந்தார். பின்னர் பரிசோதிக்கப்பட்ட இரத்தப் பரிசோதனையில் அவரது உடலில் வைட்டமின் டி அளவு முற்றிலும் குறைந்துவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக இங்கிலாந்தில் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களிடையே வைட்டமின் டி குறைபாடு ஆபத்தான அளவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமைதியான நோய்: வைட்டமின் டி குறைபாட்டின் மறைமுக ஆபத்துகள்

குழந்தைகளிடையே எலும்பு உருக்குலைவு நோயை ஏற்படுத்தும் வைட்டமின் டி குறைபாடு, பெரியவர்களையும் அமைதியாகப் பாதிக்கிறது என்று குழந்தை நல மருத்துவ நிபுணர் டாக்டர் சுமா உதய் எச்சரிக்கிறார். சோர்வு, மூட்டு மற்றும் எலும்பு வலி போன்ற எளிதில் அடையாளம் காண முடியாத அறிகுறிகளுடன் இது வெளிப்படுவதால், முறையான நோயறிதல் இல்லாமல் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. எலும்புகளை மென்மையாக்கி எளிதில் உடையும் நிலைக்குத் தள்ளும் இந்த அமைதியான நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிசெய்வது அவசியமாகும்.

கல்லூரி மாணவி அமகாவின் திகிலூட்டும் பயணம்

லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 21 வயதான அமகா osu (Amaka Osu), சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென உடல் நடுங்க ஆரம்பித்து கண் பார்வையும் மங்கலானது. வழக்கமான கல்லூரி மற்றும் வேலைப் பளுவால் ஏற்படும் சோர்வு என்று அவர் நினைத்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரியவந்தது. தனது தாய்க்கு இந்த பிரச்சனை இருந்தபோதும் தனக்கும் இது வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. தற்போது மாத்திரைகள் மூலமாக அவர் குணமடைந்திருந்தாலும், அந்த பயந்த நிகழ்வு அவரை இன்னும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: காலையில் 30 நிமிடங்கள் போதும்.. இந்த 4 பழக்கங்கள் உங்களை ஆரோக்கியமாக மாற்றும்!

பெண்களைத் தொடர்ந்து தாக்கும் வாழ்நாள் குறைபாடு

இளம் பெண்களின் உடல்நலனில் தொடரும் இந்த வைட்டமின் டி குறைபாடு பிரச்சனைக் குறித்து ‘ACT NOW Vitamin D’ என்ற அமைப்பைச் சேர்ந்த மருத்துவர்கள் தீவிர கவலை தெரிவித்துள்ளனர். தகுந்த நேரத்தில் வைட்டமின் டி அளவை கண்டறிந்து சிகிச்சை அளிக்கத் தவறினால், அது கர்ப்பக் காலம் மற்றும் பிற்கால சந்ததிகளையும் பாதிக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. பல தலைமுறைகளைப் பாதிக்கக்கூடிய இந்த ஆபத்தைத் தவிர்க்க, உணவுப் பொருட்களில் வைட்டமின் ஊட்டச்சத்துக்களைக் கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us