AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

On This Day in 2025: உலகக் கோப்பைக்கான 52 ஆண்டுப் பயணம்! சாம்பியன் பட்டத்தை தூக்கிய இந்திய மகளிர்!

Indian Women's Cricket: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 52 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, தனது முதல் ஒருநாள் உலகக் கோப்பை பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தது. 2025 நவம்பர் 2 அன்று நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, கோப்பையை வென்றது. ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா ஆகியோரின் பங்களிப்பால் இந்த வரலாற்று வெற்றி சாத்தியமானது.

On This Day in 2025: உலகக் கோப்பைக்கான 52 ஆண்டுப் பயணம்! சாம்பியன் பட்டத்தை தூக்கிய இந்திய மகளிர்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Nov 2026 16:46 PM IST

52 வருடக் காத்திருப்புக்கு பிறகு இன்றைய நாளில் இந்திய மகளிர் அணி செய்த சாதனையை எந்தவொரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள். 5 தசாப்தங்களாக உலகக் கோப்பையை வெல்லாத வலியை காலி செய்து இந்திய மகளிர் அணியின் வீராங்கனைகள் சாதித்து காட்டிய நாள் இன்று. அதன்படி, கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி, இதே நாளில், இந்திய மகளிர் அணி (Indian Women’s Cricket Team) சரித்திரம் படைத்தது. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை (ODI World Cup) இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி தனது பட்ட வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ALSO READ: ‘அந்த நாள் என் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்’ – நெகிழ்ந்து பேசிய ஸ்மிருதி மந்தனா

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் கடந்த 1973ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இருப்பினும், இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல 52 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இதற்கு முன்னர், இந்திய அணி 2005 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியது. ஆனால் இந்த இரண்டு முறையும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்திய மகளிர் அணி நூலிழையில் தவறவிட்டது.

2025 நவம்பர் 2-ஐ ஒருபோதும் மறக்க மாட்டார்கள்..


2025 நவம்பர் 2ம் தேதியை இந்திய ரசிகர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா சிறப்பான ஃபார்மில் இருந்தனர். இறுதிப் போட்டியின் அழுத்தத்தைத் தாங்கிக்கொண்டு, முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்து, இந்திய அணி உலக சாம்பியன் அந்தஸ்துக்கு உயர்வதற்கான அடித்தளத்தை அமைத்தனர். வர்மா 87 ரன்களும், மந்தனா 45 ரன்களும் எடுத்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இருப்பினும், ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா பேட்டிங்கில் 58 ரன்கள் பங்களித்து, இந்திய அணி 298 ரன்கள் எடுக்க உதவினார்.

பயம் காட்டிய தென்னாப்பிரிக்கா மகளிர்:

299 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டம் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட்டின் தொடக்கம், இந்திய அணி மீண்டும் கோப்பையை இழக்க போகிறது என்ற பயத்தை கொடுத்தது. இருப்பினும், மறுமுனையில் இருந்த எந்த பேட்ஸ்மேனாலும் நிலைத்து நிற்க முடியவில்லை. வோல்வார்ட் மெதுவாக ஆட்டத்தைச் சீராக்கி, 101 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். தென்னாப்பிரிக்கா கேப்டன் வோல்வார்ட் 42-வது ஓவர் வரை களத்தில் நீடித்து, இந்திய ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்தார்.

ALSO READ: ஹர்மன் – ஸ்மிருதி கைகுலுக்காத சம்பவம்! ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் பிரிவு? நடந்தது என்ன?

மீண்டும் தெய்வமாய் வந்த தீப்தி ஷர்மா, தென்னாப்பிரிக்கா கேப்டன் வோல்வார்ட் ஆட்டமிழந்தபோது இந்திய ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரணடைந்தது. இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது.

Follow Us