AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

MS Dhoni: தோனி அனுப்பிய ரகசிய வாட்ஸ்அப் வாழ்த்து.. ஸ்மிருதி மந்தனா சொன்ன சீக்ரெட்!

Dhoni Mandhana conversation: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்றபோது, எம்.எஸ். தோனி, ஸ்மிருதி மந்தனாவுக்கு வாட்ஸ்அப் மூலம் வாழ்த்து தெரிவித்தார். தனது எண்ணை அவரிடம் மட்டும் இருந்ததால், அணியின் அனைவருக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்பியதாக தோனி கூறினார்.

MS Dhoni: தோனி அனுப்பிய ரகசிய வாட்ஸ்அப் வாழ்த்து..  ஸ்மிருதி மந்தனா சொன்ன சீக்ரெட்!
எம்.எஸ்.தோனிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Oct 2026 22:22 PM IST

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றபோது, ​​முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியும் (MS Dhoni) அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால், அப்போது இதுதொடர்பான எந்த செய்தியும் வெளியாகவில்லை. தற்போது, இதுகுறித்து பேசிய இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தோனி வாழ்த்துச் செய்தி அனுப்பிய விதம் சற்று வித்தியாசமாக இருந்தது என்று தெரிவித்தார். தோனி வெற்றிக்கு பிறகு, ஸ்மிருதி மந்தனாவுக்கு (Smriti Mandhana) வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி அனுப்பி, முழு அணிக்கும் வாழ்த்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். தோனியின் வாழ்த்துச் செய்தியைப் பெற்றதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டதாக மந்தனா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார். தோனி தனது கைபேசியை அதிகம் பயன்படுத்துவதில்லை என்றும், அதனால் வாட்ஸ்அப்பில் தோனியின் வாழ்த்துச் செய்தியைப் பெற்றது தனக்கு ஒரு பெரிய விஷயமாக இருந்தது என்றும் மந்தனா கூறினார்.

ALSO READ: ஆர்சிபி வெற்றிக்கும்.. சிஎஸ்கே தோல்விக்கும் இதுதான் காரணம்.. சீக்ரெட்டை உடைத்த தோனி!

தோனியின் சிறப்பு வாழ்த்து:


தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே, ஸ்மிருதி மந்தனாவிடம், “தோனி எண்ணை ஷேவ் செய்து வைத்திருந்தீர்களா?” என்று நகைச்சுவையாகக் கேட்டார். அதற்கு மந்தனா, “அவருடைய எண் என்னிடம் இருந்தது” என்று பதிலளித்தார். பின்னர் தோனி அந்தச் செய்திக்கான காரணத்தை விளக்கினார். இந்திய மகளிர் அணியில் மந்தனாவின் எண் மட்டுமே தன்னிடம் இருந்ததாக கூறினார். இதுகுறித்து பேசிய தோனி, “ இந்திய மகளிர் அணியில் வேறு யாருடைய எண்ணும் எனக்குத் தெரியாது. இந்தச் செய்தி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று நான் விரும்பினேன். நாங்கள் சமீபத்தில் ஒரு விளம்பரப் படப்பிடிப்பை முடித்திருந்தோம், அதனால் ஸ்மிருதியே இந்தச் செய்தியை அனுப்பட்டும் என்று நினைத்தேன். எனவே, அணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என்று எழுதினேன்” என்றார்.

ALSO READ: ஹர்மன் – ஸ்மிருதி கைகுலுக்காத சம்பவம்! ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் பிரிவு? நடந்தது என்ன?

மகளிர் கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயம்

தோனியைப் பொறுத்தவரை, இந்த வெற்றி வெறும் ஒரு கோப்பையை விட மேலானது என்று கூறினார். “இது (உலகக் கோப்பை வெற்றி) ஒரு பெரிய விஷயம். இது இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலப் பாதையை மாற்றுகிறது. நாட்டிற்காக ஒரு பெரிய கோப்பையை வென்றதால் மட்டுமல்ல, எதிர்காலப் பெண்கள் கிரிக்கெட்டைப் பார்க்கவும், அதை எப்படி ஒரு தொழிலாக எடுத்துக்கொள்ளலாம் என்பதற்கும் இந்த இளம் வீராங்கனைகள் வழி வகுத்துள்ளனர். இது இந்திய கிரிக்கெட்டிற்கு ஒரு பெரிய நாள் என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.

Follow Us