AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND W vs ZIM W: ஜிம்பாப்வே மகளிர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா!

India Women vs Zimbabwe Women 3rd ODI: இந்தியா - ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய மகளிர் அணி, ஜிம்பாப்வே மகளிர் அணியை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வீழ்த்தியது.

IND W vs ZIM W: ஜிம்பாப்வே மகளிர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா!
இந்திய மகளிர் அணிImage Source: BCCI Women
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 28 Oct 2026 19:29 PM IST

இந்தியா – ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு (IND W vs ZIM W) இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, இந்தியாவுக்கு 130 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து, 130 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிர் அணி (India Womens Cricket Team), 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 3-0 எனக் கைப்பற்றியது. இதற்கு முன்னர் நடைபெற்ற டி20 தொடரில் இந்தியா, ஜிம்பாப்வேயை முழுமையாக வீழ்த்தியிருந்தது.

ALSO READ: ஜிம்பாப்வே மகளிர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா!

3-0 என்ற கணக்கில் தொடரை வென்ற இந்திய மகளிர்:


வதோதராவில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிரதிகா ராவல் மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோரின் அரைசதங்களின் உதவியால், இந்திய அணி இந்த இலக்கை வெறும் 17 ஓவர்களில் எட்டியது. பிரதிகா இந்தத் தொடரில் அபாரமாக பேட் செய்து, தனது 3வது தொடர்ச்சியான 50+ ரன்களை அடித்தார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் தொடர் இதுவாகும், இதில் இந்திய அணி வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் சொதப்பிய ஜிம்பாப்வே:

ஜிம்பாப்வே அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி வெறும் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஜோசபின் என்கோமோ டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆனால் இந்த முடிவு அவருக்குப் பாதகமாக அமைந்தது. இரண்டாவது ஓவரிலேயே ஜிம்பாப்வேயின் முதல் விக்கெட்டை சாயாலி சத்கரே வீழ்த்த, லோரின் ஃபிரி ரன் எதுவும் அடிக்காமல் ஆட்டமிழந்தார். சிப்போ முகேரி-திரிபானோவின் விக்கெட்டை கிராந்தி கவுட் மீண்டும் வீழ்த்தினார்.

ALSO READ: ஜிம்பாப்வேக்கு எதிராக பந்தில் விளையாடிய வைஷ்ணவி.. இந்திய மகளிர் அணிக்கு 132 ரன்கள் இலக்கு!

வைஷ்ணவி சர்மா 5 விக்கெட்கள்:

பின்னர் வைஷ்ணவி ஷர்மா தனது சுழற்பந்து மாயாஜாலத்தைக் காட்டி, ஐந்து ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்தார். அதிக ரன்கள் எடுத்த வீரரான மோடெஸ்டர் முபாச்சிக்வாவை அவர் 37 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். மேலும், வைஷ்ணவி சிட்சா துருரு, பிலிவெட் பிசா, நியாஷா குவான்சுரா மற்றும் மிச்செல் மவுங்கா ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். வைஷ்ணவி 10 ஓவர்களில் 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வைஷ்ணவி தவிர, கிராந்தி கவுட் மற்றும் சயாலி சத்கரே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜிம்பாப்வேயின் இன்னிங்ஸை 39.5 ஓவரில் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

Follow Us