AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

WPL 2027: ஏலத்தில் அதிக விலைக்கு போன மோலினக்ஸ்.. விற்கப்பட்ட வீராங்கனைகளின் முழு பட்டியல்!

WPL 2027 Auction: 2027 WPL மினி ஏலம் முடிந்தது. சோஃபி மோலினக்ஸ் ₹1.1 கோடிக்கு யுபி வாரியர்ஸுக்கு விற்கப்பட்டார், கிரண் நவகிரே ₹75 லட்சத்திற்கு டெல்லிக்குச் சென்றார். சமரி அட்டபட்டு, சோஃபி டன்க்லி போன்றோர் விற்கப்படவில்லை. மொத்தம் 25 வீரர்கள் வாங்கப்பட்டு, 124 பேர் ஏலம் எடுக்கப்படவில்லை. WPL 2027 சீசன் 2027 ஜனவரி 14 முதல் 2027 பிப்ரவரி 7 வரை நடக்கும்.

WPL 2027: ஏலத்தில் அதிக விலைக்கு போன மோலினக்ஸ்.. விற்கப்பட்ட வீராங்கனைகளின் முழு பட்டியல்!
Wpl 2027 Auction
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Oct 2026 21:30 PM IST

2027 WPL சீசனானது (WPL 2027) வருகின்ற 2027ம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் தொடங்கும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஏற்கனவே தேதிகளை அறிவித்துள்ளது. WPL-இன் 5வது சீசன் 2027 ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெறும். இந்த லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. இந்தநிலையில், இந்த சீசனுக்கு முன்னதாக, WPL ஏலமானது இன்று அதாவது 2026 அக்டோபர் 28ம் தேதி நடைபெற்றது. இந்தநிலையில், ஏலத்தில் விற்கப்பட்ட வீராங்கனைகளின் பட்டியலை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: மகளிர் பிரீமியர் லீக் 2027 ஏலம்.. வெளியான 146 வீராங்கனைகள் பட்டியல்..!

அதிகபட்ச ஏலத்தொகைக்கு விற்கப்பட்டவர் யார்..?

WPL மினி ஏலத்தில் சோஃபி மோலினக்ஸ் அதிகபட்ச ஏலத்தொகைக்கு வாங்கப்பட்டார். அவரை அணியில் சேர்ப்பதற்காக யுபி வாரியர்ஸ் அணி ரூ. 1.10 கோடியை செலவிட்டது. மோலினக்ஸின் அடிப்படை விலை ரூ. 50 லட்சம் ஆகும். இந்த ஏலத்தில் ரூ. 1 கோடிக்கும் அதிகமாக வாங்கப்பட்ட ஒரே வீராங்கனை இவர்தான். இதனை தொடர்ந்து, இந்திய வீராங்கனைகளில், கிரண் நவகிரே அதிக விலைக்கு வாங்கப்பட்டார். அவரை அணியில் சேர்ப்பதற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ. 75 லட்சத்தை செலவிட்டது. கிரணின் அடிப்படை விலை ரூ. 40 லட்சம் ஆகும்.

வாங்கப்படாத முக்கிய வீராங்கனைகளின் பெயர்கள்:

WPL ஏலத்தில் பங்கேற்ற சில பெரிய பெயர்கள் எந்த அணியாலும் வாங்கப்படுவதில் ஆர்வம் காட்டவில்லை. இவர்களில் இலங்கையின் சமரி அட்டபட்டு மற்றும் சோஃபி டன்க்லி ஆகியோர் அடங்குவர். டன்க்லி 50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையுடன் ஏலத்தில் நுழைந்தார். ஆனால் விற்கப்படாமலேயே இருந்தார். இலங்கை மகளிர் அணியின் கேப்டன் அட்டபட்டுவின் அடிப்படை விலை 30 லட்சம் ரூபாயாக இருந்தது. அவரையும் வாங்குவதில் எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.

ALSO READ: WPL 2027 : 5 அணிகளில் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீராங்கனைகள் யார்?

WPL ஏலத்தில் விற்கப்பட்ட வீரர்கள்

வீரர்  அணி பங்கு அடிப்படை விலை விற்பனை விலை
சோஃபி மோலினக்ஸ் யுபி வாரியர்ஸ் ஆல்-ரவுண்டர் ரூ. 50 லட்சம் ரூ. 1.10 கோடி
கிரண் நவகிரே டெல்லி கேப்பிடல்ஸ் பேட்ஸ்மேன் ரூ. 40 லட்சம் ரூ. 75 லட்சம்
ஜெஸ் ஜோனாசென் ஆர்சிபி ஆல்-ரவுண்டர் ரூ. 40 லட்சம் ரூ. 40 லட்சம்
ஜி. கமாலினி குஜராத் ஜயண்ட்ஸ் பேட்ஸ்மேன் ரூ. 40 லட்சம் ரூ. 40 லட்சம்
கிரேஸ் ஹாரிஸ் யுபி வாரியர்ஸ் ஆல்-ரவுண்டர் ரூ. 30 லட்சம் ரூ. 30 லட்சம்
தேஜல் ஹசப்னிஸ் ஆர்சிபி பேட்ஸ்மேன் ரூ. 30 லட்சம் ரூ. 30 லட்சம்
ஓர்லா பிரெண்டர்காஸ்ட் குஜராத் ஜயண்ட்ஸ் ஆல்-ரவுண்டர் ரூ. 30 லட்சம் ரூ. 30 லட்சம்
ஸ்நே ராணா யுபி வாரியர்ஸ் ஆல்-ரவுண்டர் ரூ.30 லட்சம் ரூ.30 லட்சம்
ஆஷா ஷோபனா யுபி வாரியர்ஸ் பந்துவீச்சாளர் ரூ.30 லட்சம் ரூ.30 லட்சம்
குளோ ட்ரையன் ஆர்சிபி ஆல்-ரவுண்டர் ரூ.30 லட்சம் ரூ.30 லட்சம்
சுஷ்மா வெர்மா யுபி வாரியர்ஸ் விக்கெட் கீப்பர் ரூ.30 லட்சம் ரூ.30 லட்சம்
ஸ்வேதா செஹ்ராவத் மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன் ரூ.10 லட்சம் ரூ.20 லட்சம்
அக்ஷிதா பகத் மும்பை இந்தியன்ஸ் ஆல்-ரவுண்டர் ரூ.10 லட்சம் ரூ.10 லட்சம்
கேத்தரின் பிரைஸ் யுபி வாரியர்ஸ் ஆல்-ரவுண்டர் ரூ.10 லட்சம் ரூ.10 லட்சம்
சனிகா சால்கே மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன் ரூ.10 லட்சம் ரூ.10 லட்சம்
மணாலி தெற்கு யுபி வாரியர்ஸ் ஆல்-ரவுண்டர் ரூ.10 லட்சம் ரூ.10 லட்சம்
பிருந்தா தினேஷ் ஆர்சிபி பேட்ஸ்மேன் ரூ.10 லட்சம் ரூ.10 லட்சம்
கிறிஸ்டி கோர்டன் டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சாளர் ரூ.10 லட்சம் ரூ.10 லட்சம்
லத்திகா இனாம்தார் மும்பை இந்தியன்ஸ் விக்கெட் கீப்பர் ரூ.10 லட்சம் ரூ.10 லட்சம்
திஷா கசாட் மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன் ரூ.10 லட்சம் ரூ.10 லட்சம்
உமா காஷ்வி டெல்லி தலைநகரங்கள் ஆல்-ரவுண்டர் ரூ.10 லட்சம் ரூ.10 லட்சம்
நஜ்மா கான் டெல்லி கேப்பிடல்ஸ் ஆல்-ரவுண்டர் ரூ.10 லட்சம் ரூ.10 லட்சம்
சஹானா பவார் யுபி வாரியர்ஸ் ஆல்-ரவுண்டர் ரூ.10 லட்சம் ரூ.10 லட்சம்
சமீரா ராகவ் குஜராத் ஜயண்ட்ஸ் ஆல்-ரவுண்டர் ரூ.10 லட்சம் ரூ.10 லட்சம்
பார்தி ராவல் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர் ரூ.10 லட்சம் ரூ.10 லட்சம்

Follow Us