AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

WPL 2027 : 5 அணிகளில் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீராங்கனைகள் யார்?

WPL 2027 Retention List : மகளிர் பிரீமியர் லீக் 2027 சீசனுக்கான ஏலத்துக்கு முன்னதாக, 5 அணிகளும் தாங்கள் தக்கவைத்துக் கொண்ட மற்றும் விடுவித்த வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளன. நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அதிரடி ஆஸ்திரேலிய வீராங்கனை கிரேஸ் ஹாரிஸை விடுவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

WPL 2027 : 5 அணிகளில் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீராங்கனைகள் யார்?
மகளிர் ப்ரீமியம் லீக்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Sep 2026 19:34 PM IST

மகளிர் பிரீமியர் லீக் அடுத்த சீசன் ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான ஏலம் அக்டோபர் 28, 2026 அன்று நடைபெறவிருக்கிறது. அனைத்து அணிகளும் செப்டம்பர் 28, 2026க்குள் தக்கவைக்கும் வீராங்கனைகளின் பட்டியலை அறிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. அதன்படி, ஏலத்துக்குச் சரியாக ஒரு மாதம் முன்பு அனைத்து அணிகளும் தங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.

இந்த 2026 ஆம் ஆண்டு ரீடென்ஷனில் சில எதிர்பாராத முடிவுகள் இடம்பெற்றுள்ளன. இளம் இந்திய வீராங்கனை ஜி. கமலினியை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவித்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஸ்நேஹ் ராணாவை விடுவித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்து கிரேஸ் ஹாரிஸ் வெளியேற்றப்பட்டுள்ளார். அதிகபட்சமாக யுபி வாரியர்ஸ் அணி 9 வீராங்கனைகளை விடுவித்துள்ளது.

அணி வாரியாக முழுப் பட்டியல்

டெல்லி கேப்பிடல்ஸ்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அலானா கிங், லிசெல் லீ, ஸ்நேஹ் ராணா, தானியா பாட்டியா, பிரகதி சிங், எட்லா ஸ்ருஜனா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே போல அனபெல் சதர்லேண்ட், ஷினெல் ஹென்றி, லாரா வோல்வார்ட், லூசி ஹாமில்டன், மரிசான் காப், தியா யாதவ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், மம்தா மடிவாலா, மின்னு மணி, என். ஸ்ரீ சரணி, நந்தினி ஷர்மா, நிக்கி பிரசாத், ஷஃபாலி வர்மா ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்த அணயில் 1 வெளிநாட்டு வீராங்கனை உட்பட 5 பேருக்கான இடம் காலியாக உள்ளது.

இதையும் படிக்க : IND vs WI: 55வது சதத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்கள்.. இமயம் தொட்ட விராட் கோலி!

குஜராத் ஜெயன்ட்ஸ்

குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் டேனி வியாட்-ஹாட்ஜ், ஆயுஷி சோனி, டைட்டஸ் சாது, ஷிவானி சிங் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே போல ஆஷ்லே கார்ட்னர், பெத் மூனி, ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், சோஃபி டிவைன், அனுஷ்கா ஷர்மா, பாரதி புல்மாலி, ஹேப்பி குமாரி, ஜிந்திமணி கலிதா, கனிகா அஹூஜா, காஷ்வி கௌதம், ராஜேஸ்வரி கெய்க்வாட், ரேணுகா சிங், தனுஜா கன்வர், யஸ்திகா பாட்டியா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்த அணியில் 1 வெளிநாட்டு வீராங்கனை உட்பட 3 பேருக்கான இடம் காலியாக உள்ளது.
காலியிடங்கள்: 3 (1 வெளிநாட்டு வீராங்கனை)

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியில் மில்லி இல்லிங்வொர்த், ஜி. கமலினி, கிராந்தி ரெட்டி, பூனம் கேம்னர், சைகா இஷாக், திரிவேணி வசிஷ்டா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமெலியா கெர், ஹேலி மேத்யூஸ், நாட் சிவர் பிரண்ட், நிக்கோலா கேரி, அமன்ஜோத் கவுர், ஹர்மன்ப்ரீத் கவுர், ராஹிலா ஃபிர்தௌஸ், எஸ். சஜனா, சம்ஸ்கிருதி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், வைஷ்ணவி ஷர்மா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்த அணியில் 1 வெளிநாட்டு வீராங்கனை உட்பட 7 பேருக்கான இடம் காலியாகவுள்ளது.
காலியிடங்கள்: 7 (1 வெளிநாட்டு வீராங்கனை)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கிரேஸ் ஹாரிஸ், லின்சி ஸ்மித், டி. ஹேமலதா, கௌதமி நாயக் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே போல ஸ்மிருதி மந்தனா, எலிஸ் பெர்ரி, ஜார்ஜியா வால், லாரன் பெல், நாடின் டி கிளார்க், அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்த்ராகர், பிரத்யூஷா குமார், பிரேமா ராவத், ராதா யாதவ், ரிச்சா கோஷ், சயாலி சத்கரே, ஸ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்த அணியில் 2 வெளிநாட்டு வீராங்கனைகள் உட்பட 5 பேருக்கான இடம் காலியாகவுள்ளனது.

இதையும் படிக்க : Team India: எங்களது ஓய்வு பிளான் இதுதான்.. கோலியுடான ரிட்டயர்மெண்ட் திட்டம் குறித்து ரோஹித் ஓபன்!

யுபி வாரியர்ஸ்

யுபி வாரியர்ஸ் அணியில் ஏமி ஜோன்ஸ், சார்லி டீன், க்ளோ ட்ரையான், டியாண்ட்ரா டாட்டின், ஆஷா ஷோபனா, ஜி. திரிஷா, கிரண் நவ்கிரே, ஸ்வேதா செஹ்ராவத், சுமன் மீனா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். மேலும் மெக் லானிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், சோஃபி எக்லெஸ்டோன், தாரா நோரிஸ், தீப்தி ஷர்மா, ஹர்லீன் தியோல், கிராந்தி கௌட், பிரத்திகா ராவல், ஷிகா பாண்டே, ஷிப்ரா கிரி, சிம்ரன் ஷேக் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்த அணியில் 2 வெளிநாட்டு வீராங்கனைகள் உட்பட 11 பேருக்கான இடம் காலியாகவுள்ளது.

ஏலத்தில் அதிகபட்சமாக 11 இடங்களை நிரப்ப வேண்டிய யுபி வாரியர்ஸ் அணி, அதிகத் தொகையுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சமாக குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு 3 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

Follow Us