IND vs WI: 55வது சதத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்கள்.. இமயம் தொட்ட விராட் கோலி!
Virat Kohli 15k ODI Runs: திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 59 ரன்கள் எடுத்ததன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15,000 ரன்களை கடந்தார். இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15,000 ரன்களை கடந்த 2வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான (Ind vs Wi) முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்பீல்டு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று அதாவது 2026 செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்று வருகிறது. இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 59 ரன்கள் எடுத்ததன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15,000 ரன்களை கடந்தார். இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15,000 ரன்களை கடந்த 2வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை விராட் கோலி (Virat Kohli) படைத்தார். மேலும், அதிவேகமாக 15,000 ஒருநாள் ரன்களை எட்டிய இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையையும் விராட் கோலி முறியடித்துள்ளார். தொடர்ந்து, சிறப்பாக விளையாடிய விராட் கோலி 74 பந்துகளில் சதம் அடித்து ஒருநாள் போட்டிகளில் தனது 55வது சதத்தையும் பதிவு செய்தார்.
ALSO READ: 295 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ்.. இலக்கை விரட்டுமா சுப்மன் கில் படை?
15,000 ரன்கள்:
Fastest to 1⃣5⃣0⃣0⃣0⃣ ODI runs ✅
Congratulations to Virat Kohli on becoming the second player to achieve the feat after Sachin Tendulkar 👏👏
Updates ▶️ https://t.co/O2cs86p4gq#TeamIndia | #INDvWI | @mflone_ | @imVkohli pic.twitter.com/CMhAIOXQhR
— BCCI (@BCCI) September 27, 2026
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணிக்கு 296 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ரோஹித் சர்மா 32 ரன்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, விராட் கோலி 3வது வீரராகக் களமிறங்கினார். கோலி 40 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். 29வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்து, கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 15,000 ரன்களை எட்டினார்.
சச்சினின் சாதனையை முறியடித்த கோலி :
இதற்கு முன்பு, சச்சின் டெண்டுல்கர் மட்டுமே ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள் எடுத்திருந்தார். சச்சின் இந்த மைல்கல்லை 2007 ஜூன் 29 அன்று, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடியபோது எட்டினார். அப்போது, சச்சின் டெண்டுல்கர் தனது 387வது போட்டியிலும் 377வது இன்னிங்ஸிலும் 15,000 ரன்களை எட்டினார். அவரை விட குறைவான இன்னிங்ஸ்களிலேயே கோலி இந்த மைல்கல்லை எட்டினார். அதாவது, விராட் கோலி தனது 315வது போட்டியிலும் 303வது இன்னிங்ஸிலும் 15,000 ஒருநாள் ரன்களை எட்டினார்.
ALSO READ: எங்களது ஓய்வு பிளான் இதுதான்.. கோலியுடான ரிட்டயர்மெண்ட் திட்டம் குறித்து ரோஹித் ஓபன்!
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்:
- சச்சின் டெண்டுல்கர் – 18,426
- விராட் கோலி – 15,000 ப்ளஸ்
- குமார் சங்கக்கரா – 14,234
- ரிக்கி பாண்டிங் – 13,704
- ஜெயவர்த்தனே – 13,430
- சனத் ஜெயசூர்யா – 12,650
- ரோஹித் சர்மா – 11, 895