AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Team India: எங்களது ஓய்வு பிளான் இதுதான்.. கோலியுடான ரிட்டயர்மெண்ட் திட்டம் குறித்து ரோஹித் ஓபன்!

Rohit Sharma Retirement Plan: 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் ரோஹித், கோலி ஓய்வு ஒரு திட்டமிட்ட முடிவு என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். பல வருட உழைப்புக்குப் பின் ஐசிசி கோப்பையை வென்றதால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். இருவரும் ஓய்வு திட்டங்களை ஏற்கனவே வகுத்திருந்தனர். விராட் கோலி 2027 ஒருநாள் உலகக் கோப்பை தனது கடைசிப் போட்டியாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார்.

Team India: எங்களது ஓய்வு பிளான் இதுதான்.. கோலியுடான ரிட்டயர்மெண்ட் திட்டம் குறித்து ரோஹித் ஓபன்!
விராட் கோலி - ரோஹித் சர்மா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Sep 2026 18:32 PM IST

2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு (Indian Cricket Team) மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பிறகு, சுமார் 11 ஆண்டுகளை கடந்து இந்தியா ஐசிசி கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பிறகு, ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலியும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து, ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு அடியில் உள்ள படிக்கட்டுகளில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். ரசிகர்கள் இந்த உணர்ச்சிகரமான தருணத்தை இன்றும் நினைவில் வைத்திருக்கிறார்கள். இது குறித்துப் பேசிய ரோஹித் சர்மா, தற்போது ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். அதில், விராட்டும் தானும் ஏற்கனவே ஓய்வு பெறும் திட்டங்களை வகுத்திருந்தாக குறிப்பிட்டார்.

ALSO READ: ரோஹித், கோலி, ஜடேஜா வச்ச குறி.. குவிய காத்திருக்கும் சாதனைகள்!

முக்கிய தகவலை வெளியிட்ட ரோஹித் சர்மா:

சோனி டிவிக்கு ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் 2024 உலகக் கோப்பையை வென்ற பிறகு விராட் கோலியுடன் ஏற்பட்ட ஒரு உணர்ச்சிகரமான தருணம் குறித்து விவாதித்திருந்தார். அவர் கூறியதாவது, “2015 முதல் 2024 வரை, நாங்கள் இருவரும் உலகக் கோப்பையைத் துரத்திக்கொண்டிருந்தோம். பலமுறை வெற்றிக்கு மிக அருகில் வந்தோம். ஆனால், ஒருபோதும் வென்றதில்லை. 2015, 2019 மற்றும் மீண்டும் 2023-ல் வெற்றிக்கு மிக அருகில் வந்தோம். அதை நான் நினைவுகூரக்கூட விரும்பவில்லை. நவம்பர் 19-ஐ நான் மறக்க விரும்புகிறேன். 6 மாதங்களுக்குப் பிறகு, 2024 டி20 உலகக் கோப்பைதான் எனது கடைசிப் போட்டியாக இருக்கும் என்பதை நான் அறிந்துகொண்டேன்.” என்றார்.

தானும் விராட் கோலியும் ஏற்கனவே ஓய்வு பெறும் திட்டத்தை வகுத்திருந்ததாக ரோஹித் ஷர்மா வெளிப்படுத்தினார். அதில், 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு நாங்கள் இருவரும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவோம் என்று விராட் கோலியும் நானும் விவாதித்திருந்தோம். அதனால்தான் எங்களால் எங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனென்றால். நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து, பல ஆண்டுகளாக உலகக் கோப்பையைத் துரத்திக் கொண்டிருந்தோம். இறுதியாக நாங்கள் வென்றோம்,” என்றார்.

ALSO READ: எந்தெந்த நாட்களில் ரோஹித், கோலி களம்..? இந்திய அணியின் ஒருநாள் அட்டவணை!

இந்தியாவுக்கான கடைசி உலகக் கோப்பை

மறுபுறம், தற்போது விராட் கோலியும் ஒருநாள் உலகக் கோப்பையில் தனது ஓய்வு குறித்து ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று அதாவது 2026 செப்டம்பர் 27ம் தேதி தொடங்கும் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முன்னதாக, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் குறித்து பேசினார். அதில், தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பைதான் இந்தியாவுக்காக தான் விளையாடும் கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

Follow Us