AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI: எந்தெந்த நாட்களில் ரோஹித், கோலி களம்..? இந்திய அணியின் ஒருநாள் அட்டவணை!

Virat Kohli-Rohit Sharma ODI Schedule: இந்தியாவின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் 2026 செப் 27 முதல் அக்டோபர் 17 வரை நடக்கிறது. 8 போட்டிகளில், ரோஹித் மற்றும் விராட் கோலி ஒருநாள் தொடரில் (3 போட்டிகள்) மட்டுமே விளையாடுகின்றனர். T20 தொடரில் அவர்கள் பங்கேற்க மாட்டார்கள். பல மாதங்களுக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜா ஒருநாள் அணிக்குத் திரும்புகிறார்.

IND vs WI: எந்தெந்த நாட்களில் ரோஹித், கோலி களம்..? இந்திய அணியின் ஒருநாள் அட்டவணை!
விராட் கோலி - ரோஹித் சர்மாImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Sep 2026 09:29 AM IST

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணம் வருகின்ற 2026 செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி வருகின்ற 2026 அக்டோபர் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. சுமார் 3 வார காலத்திற்குள் இந்தியா (Indian Cricket Team) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே மொத்தம் 8 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி (Virat Kohli) போன்ற ஜாம்பவான்கள் எத்தனை போட்டிகளில் விளையாடுவார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்துடன் ரவீந்திர ஜடேஜாவும் பல மாதங்களுக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணிக்குத் திரும்புவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ALSO READ: ருதுராஜ்க்கு வாய்ப்பு.. வெயிட்டிங்கில் ஜெய்ஸ்வால்.. இந்திய அணி பிளேயிங் லெவன் கணிப்பு!

கோலி – ரோஹித் எத்தனை போட்டிகளில் விளையாடுவார்கள்..?

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்தியாவின் இந்த சுற்றுப்பயணம் 21 நாட்கள் நீடிக்கும். இதில் மொத்தம் 8 போட்டிகள் நடைபெறும். ஆனால், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி 3 போட்டிகளில் மட்டுமே களத்தில் விளையாடுவார்கள். இந்திய அணி ரசிகர்கள் இந்த ‘ரோஹித் – கோலி’ ஜோடியை இந்திய ஜெர்சியில் களத்தில் காணக்கூடிய தேதிகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

3 போட்டிகளில் மட்டுமே விளையாடும் ரோஹித்-விராட் ஜோடி:

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாளை அதாவது 2026 செப்டம்பர் 27ம் தேதி திருவனந்தபுரத்திலும், இரண்டாவது போட்டி வருகின்ற 2026 செப்டம்பர் 30ம் தேதி குவஹாத்தியிலும் நடைபெறும். கடைசி ஒருநாள் போட்டி 2026 அக்டோபர் 3ம் தேதி புது சண்டிகரில் நடைபெறும். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்த 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள். ரோஹித் மற்றும் விராட் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், வருகின்ற 2026 அக்டோபர் 6 முதல் தொடங்கும் டி20 தொடரில் ரோஹித் – விராட் விளையாட மாட்டார்கள்.

  • 2026 செப்டம்பர் 27 – முதல் ஒருநாள் போட்டி – இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
  • 2026 செப்டம்பர் 30 – 2வது ஒருநாள் போட்டி – இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
  • 2026 அக்டோபர் 3 – 3வது ஒருநாள் போட்டி – இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்

டி20 தொடரில் ரோஹித் – கோலி களமிறங்குவார்களா?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டி20 தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாட மாட்டார்கள். இருவரும் 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெற்றுவிட்டனர். இரு அணிகளும் 2026 அக்டோபர் 6 முதல் 2026 அக்டோபர் 17 வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும். இந்திய அணி இன்னும் சில நாட்களில் நியூசிலாந்துக்கு புறப்படவுள்ளது. அங்கு, இந்திய அணி 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ஒருநாள் போட்டியில் சாதனையை வலுவாக்கும் ரோஹித், கோலி.. எட்டமுடியாத ரெக்கார்ட்டும் ரெடி!

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா, விராட் கோலி , சுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், நமன் திர், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, கே.எல். ராகுல், துருவ் ஜுரல், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார்.

Follow Us