AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI: ரோஹித், கோலி, ஜடேஜா வச்ச குறி.. குவிய காத்திருக்கும் சாதனைகள்!

Kohli, Rohit, Jadeja Eye Major Records: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் (செப் 27, 2026) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. கோலி, ரோஹித், ஜடேஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்குகின்றனர். கோலி 10வது சதம், ஜடேஜா அதிக விக்கெட்டுகள், ரோஹித் 2000 பவுண்டரிகள் என முக்கிய சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளது. ருதுராஜ், ஆகிப் நபி அறிமுகம் பெறலாம். இந்த போட்டி எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும்.

IND vs WI: ரோஹித், கோலி, ஜடேஜா வச்ச குறி.. குவிய காத்திருக்கும் சாதனைகள்!
ரோஹித், கோலி, ஜடேஜா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Sep 2026 16:04 PM IST

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு (IND vs WI) இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 2026 செப்டம்பர் 27ம் தேதி நடைபெற உள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்குகின்றனர். அதே சமயம், ரவீந்திர ஜடேஜாவும் பல மாதங்களுக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணிக்குத் திரும்புகிறார். ஷ்ரேயாஸ் ஐயர் இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்காததால், ருதுராஜ் கெய்க்வாடுக்கு 4-வது இடத்தில் வாய்ப்பு கிடைக்கலாம். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆகிப் நபியும் இந்தத் தொடரில் தனது சர்வதேச அறிமுகத்தை மேற்கொள்ளக்கூடும்.

இந்தத் தொடரில் பல முன்னணி வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும் நேரத்தில், இந்திய அணி களமிறங்கும்போது 3 முக்கிய சாதனைகளை முறியடிக்கக்கூடும். விராட் கோலியும் ரவீந்திர ஜடேஜாவும் சரித்திரம் படைக்கும் தருவாயில் உள்ளனர்.

ALSO READ: இதுதான் எனது கடைசி உலகக் கோப்பை.. ஓபனாக பேசிய விராட் கோலி..!

வெஸ்ட் இண்டீஸ் எதிராக 10 சதங்கள் – விராட் கோலி

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 41 இன்னிங்ஸ்களில் 9 சதங்கள் அடித்துள்ளார். ஐந்து சதங்களுடன் பாபர் அசாம் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 100 ரன்கள் எடுத்தால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 10 சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் படைப்பார்.

அதிக விக்கெட்டுகள் – ரவீந்திர ஜடேஜா

இதுவரை, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே 142 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இரு நாடுகளின் புள்ளிவிவரங்களில், ரவீந்திர ஜடேஜா மற்றும் கோர்ட்னி வால்ஷ் ஆகியோர் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் தலா 44 விக்கெட்டுகளுடன் சமநிலையில் உள்ளனர். முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜா ஒரு விக்கெட்டை எடுத்தவுடன், ஜடேஜா இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பார். இந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 50 ஒருநாள் விக்கெட்டுகளை எட்டிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற முடியும். இந்தச் சாதனையை அடைய ஜடேஜா இன்னும் 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

ALSO READ: ருதுராஜ்க்கு வாய்ப்பு.. வெயிட்டிங்கில் ஜெய்ஸ்வால்.. இந்திய அணி பிளேயிங் லெவன் கணிப்பு!

சர்வதேச கிரிக்கெட்டில் 2000 பவுண்டரிகள்

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், மொத்தம் 20 வீரர்கள் 2,000 அல்லது அதற்கு மேற்பட்ட பவுண்டரிகளை அடித்துள்ளனர். 5 இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதன்மூலம், ரோஹித் சர்மா 2,000 பவுண்டரிகளை அடித்த ஆறாவது இந்திய பேட்ஸ்மேனாக ஆகக்கூடும். ரோஹித் இதுவரை 1,982 பவுண்டரிகளை அடித்துள்ளார். தனது முதல் ஒருநாள் போட்டியில் 18 பவுண்டரிகள் அடிப்பது கடினமாக இருக்கும். ஆனால், ரோஹித் சர்மா இதற்கு முன்பு ஒரு இன்னிங்ஸில் 20 மற்றும் 30 பவுண்டரிகளைக் கூட அடித்துள்ளார்.

Follow Us