AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ODI World Cup 2027: இதுதான் எனது கடைசி உலகக் கோப்பை.. ஓபனாக பேசிய விராட் கோலி..!

Virat Kohli Final Match: 2027 ஒருநாள் உலகக் கோப்பை வருகின்ற 2027 அக்டோபர் 4 முதல் 2027 நவம்பர் 21 வரை நடைபெறும். உலகக் கோப்பையின் வடிவமும் மாற்றப்பட்டுள்ளது. இதில் 14 அணிகள் கோப்பையை வெல்லப் போட்டியிடுகின்றன. முதலில், கடைசி 3 இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையே சூப்பர் 3 தொடரும். அதைத் தொடர்ந்து 12 அணிகளுக்கு இடையே சூப்பர் 7 கட்டமும் நடைபெறும்.

ODI World Cup 2027: இதுதான் எனது கடைசி உலகக் கோப்பை.. ஓபனாக பேசிய விராட் கோலி..!
விராட் கோலி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Sep 2026 15:26 PM IST

2027 ஒருநாள் உலகக் கோப்பைதான் (2027 ODI World Cup) தனது கடைசி உலகக் கோப்பைத் தொடராக இருக்கும் என்று விராட் கோலியே (Virat Kohli) கூறியுள்ளார். 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த விராட் கோலி, 2027-ல் நடைபெறும் தனது கடைசி உலகக் கோப்பையில் தனது முழு முயற்சியையும் வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார். இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும். பெரும்பாலான போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும், அங்கு விராட் கோலொ ஒருநாள் போட்டிகளில் 76.38 என்ற சராசரியைக் கொண்டுள்ளார்.

2027 ஒருநாள் உலகக் கோப்பை வருகின்ற 2027 அக்டோபர் 4 முதல் 2027 நவம்பர் 21 வரை நடைபெறும். உலகக் கோப்பையின் வடிவமும் மாற்றப்பட்டுள்ளது. இதில் 14 அணிகள் கோப்பையை வெல்லப் போட்டியிடுகின்றன. முதலில், கடைசி 3 இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையே சூப்பர் 3 தொடரும். அதைத் தொடர்ந்து 12 அணிகளுக்கு இடையே சூப்பர் 7 கட்டமும் நடைபெறும்.

ALSO READ: எந்தெந்த நாட்களில் ரோஹித், கோலி களம்..? இந்திய அணியின் ஒருநாள் அட்டவணை!

இது என் கடைசி உலகக் கோப்பை:

விராட் கோலி ஜியோஹாட்ஸ்டாரிடம், “உலகக் கோப்பை வெளிநாட்டுச் சூழலில் நடைபெற உள்ளது. அதற்கு மிகுந்த ஆற்றலும் கடின உழைப்பும் தேவை. இதுவே எனது கடைசி உலகக் கோப்பை, மேலும் இதுவே எனக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரம். இதில் நான் எனது முழு உழைப்பையும் கொடுப்பேன்,” என்று கூறினார்.

கேப்டன் சுப்மன் கில் குறித்து பேசிய கோலி, “கேப்டன் சுப்மன் கில் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறார். இந்த பொறுப்பில் அவர் இன்னும் இளமையானவர்தான். ஆனால், இந்திய அணியை வழிநடத்துவதற்கான சரியான கண்ணோட்டம் கில்லிடம் உள்ளது. பேட்ஸ்மேன்களை களத்தில் இறக்குவதற்கான வழிகளை சிந்திக்கிறார். இது எப்போதும் வித்தியாசமாக ஏதாவது செய்வதற்கான அல்லது ஒரு படி முன்னே செல்வதற்கான வழியாகும்.

எதிரணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்க பந்துவீச்சாளர்களிடம் பேசுகிறார். தேவைப்படும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வகையான பந்துவீச்சு தாக்குதலை கொண்டுவரவும் தயங்குவதில்லை” என்று பேசினார்.

ALSO READ: ருதுராஜ்க்கு வாய்ப்பு.. வெயிட்டிங்கில் ஜெய்ஸ்வால்.. இந்திய அணி பிளேயிங் லெவன் கணிப்பு!

விராட் கோலிக்கு 5வது ஒருநாள் உலகக் கோப்பை

விராட் கோலிக்கு இது இந்தாவது ஒருநாள் உலகக் கோப்பையாகும். கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 2011 மற்றும் 2023ம் ஆண்டுகளில் 2 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த இரண்டு தொடர்களுமே இந்தியாவில்தான் நடைபெற்றன. 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இலங்கைக்கு எதிராக ஒரு முக்கியமான தருணத்தில் விராட் கோலி 35 ரன்கள் எடுத்தார். 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், விராட் கோலி 54 ரன்கள் எடுத்தார், ஆனால் அந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

Follow Us