AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI ODI: சிராஜ் பந்தால் ஏற்பட்ட சிக்கல்.. கில் கையில் காயம்.. சந்தேகத்தில் இந்திய அணி கேப்டன்?

Shubman Gill Injury Scare: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக பயிற்சி செய்தபோது சுப்மன் கில்லுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. முகமது சிராஜின் பந்து தாக்கியதால், அவர் பயிற்சியிலிருந்து விலகினார். வரும் 2026 செப்டம்பர் 27 அன்று திருவனந்தபுரத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் கில் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. அவரது காயம் எவ்வளவு தீவிரமானது என்பது குறித்த கவலை நிலவுகிறது.

IND vs WI ODI: சிராஜ் பந்தால் ஏற்பட்ட சிக்கல்.. கில் கையில் காயம்.. சந்தேகத்தில் இந்திய அணி கேப்டன்?
சுப்மன் கில் காயம்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Sep 2026 22:03 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான (IND vs WI) ஒருநாள் தொடர் தொடங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியின் (Indian Cricket Team) கேப்டன் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்காகப் பயிற்சி செய்தபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கில் பயிற்சியிலிருந்து விலகினார். வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்து அவரது வலது முழங்கையில் தாக்கியதால், அவருக்குக் கட்டுப் போடப்பட்டது.

ALSO READ: ஹர்திக், பும்ராவுக்கு அடிக்கடி காயம்.. உலகக் கோப்பையில் இடம் இருக்குமா..? கம்பீர் நச் பதில்!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, வருகின்ற 2026 செப்டம்பர் 27ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய வீரர்கள் நேற்று அதாவது 2026 செப்டம்பர் 24ம் தேதி முதல் அங்கு பயிற்சி செய்து வருகின்றனர். 2026 செப்டம்பர் 25ம் தேதியான இன்று நடைபெற்ற பயிற்சியின் போது, ​​கேப்டன் சுப்மன் கில் மீது சிராஜின் பந்து தாக்கியது. வலது முழங்கையில் அடிபட்ட பிறகு, கில் பயிற்சியை நிறுத்திவிட்டு, அமர்ந்து, காயம்பட்ட இடத்தில் கட்டுப் போட்டுக் கொண்டார். பயிற்சியின் போது ரோஹித் ஷர்மாவும் அவரைப் பார்த்து நலம் விசாரித்தார்.

சுப்மன் கில் பயிற்சி மேற்கொண்டாரா..?

காயத்திற்குப் பிறகு, ஷுப்மன் கில் மீண்டும் களத்திற்குத் திரும்பி, வீரர்களுடன் பேசினார். ஆனால், அதன்பிறகு நெட் பயிற்சியில் ஈடுபடவில்லை. இந்தநிலையில், கில்லின் காயம் எவ்வளவு தீவிரமானது என்பது ரசிகர்களின் கவலையாக உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவரால் விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடருக்கு முன்னதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசிய தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ” பயிற்சியாளர் ஆன பிறகு நான் நான்கு கேப்டன்களுடன் பணியாற்றியுள்ளேன். அவர்கள் அனைவரின் முதல் நோக்கமும் அணிக்கு முன்னுரிமை அளிப்பதாகவே இருந்தது. தங்களை விட அணிக்கு முன்னுரிமை அளித்த கேப்டன்களுடன் பணியாற்றியது என் அதிர்ஷ்டம்” என்று கூறினார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பதவியை அற்புதமாகக் கையாண்ட சுப்மன் கில்லையும் அவர் பாராட்டினார்.

ALSO READ: ஒருநாள் போட்டியில் சாதனையை வலுவாக்கும் ரோஹித், கோலி.. எட்டமுடியாத ரெக்கார்ட்டும் ரெடி!

இந்திய ஒருநாள் அணி

ரோஹித் சர்மா, விராட் கோலி , கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆகிப் நபி, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் குமார் ரெட்டி, குர்னூர் பிரார்.

Follow Us