ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது?
India vs Pakistan Clash : ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 24, 2026 இன்று முதல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி எப்போது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 24, 2026 இன்று முதல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் தரவரிசை அடிப்படையில் நேரடியாக காலிறுதி சுற்றில் களமிறங்கவிருக்கின்றன. இந்த நிலையில் இந்திய ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் இந்திய – பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டி எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்
ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆண்களுக்கான கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. தரவரிசையின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஆப்கானிஸ்தான் அணியும் பிரதான சுற்றில் இடம்பிடித்துள்ளது. மேலும், தகுதிச்சுற்றின் மூலம் ஹாங்காங், மலேசியா, நேபாளம் மற்றும் ஓமன் அணிகள் பிரதான சுற்றுக்கு வந்துள்ளன. போட்டியை நடத்தும் நாடான ஜப்பான் அணி நேரடியாக பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : Team India: கில் மிகவும் அதிர்ஷ்டசாலி.. ரோஹித் – கோலியை குறித்து கம்பீர் கூறியது என்ன?




இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளைத் தவிர மற்ற 6 அணிகள் இரண்டு குரூப்பாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒவ்வொரு குரூப்பிலும் 3 அணிகள் இடம்பெறும். இந்த அணிகள் தங்களுக்குள் லீக் முறையில் விளையாடும். ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். காலிறுதி சுற்றில் ஏற்கனவே நேரடியாக தகுதி பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுடன் மோதும்.
இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது?
தற்போதைய போட்டி அட்டவணை மற்றும் விதிமுறைகளின்படி, இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி லீக் சுற்று மற்றும் காலிறுதி சுற்றில் நடைபெற வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது. அதன் படி இந்தியாவும் பாகிஸ்தானும் காலிறுதி சுற்று மற்றும் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றால், அக்டோபர் 3, 2026 அன்று நடைபெறும் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் நேரடியாக மோதும்.
இதையும் படிக்க : IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஒருநாள் தொடர்.. திருவனந்தபுரம் வந்த கிங் கோலி!
அதே நேரம், 2 அணிகளும் அரையிறுதியில் தோல்வியடைந்தால், அக்டோபர் 3, 2026 அன்று நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடும் சூழல் உருவாகலாம். இதனால், ரசிகர்கள் எதிர்பார்க்கும் பரபரப்பான இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடைபெற வேண்டுமெனில், முதலில் இரு அணிகளும் நாக்-அவுட் சுற்றுகளில் முன்னேற வேண்டிய நிலை உள்ளது.
மற்றொரு பக்கம் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடவிருக்கின்றன. இந்த தொடரின் முதல் போட்டிகள் வருகிற செப்டம்பர் 27, 2026 ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.