AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Team India: கில் மிகவும் அதிர்ஷ்டசாலி.. ரோஹித் – கோலியை குறித்து கம்பீர் கூறியது என்ன?

India's 2027 World Cup Plans: சுப்மன் கில்லின் ஒருநாள் கேப்டன்சிக்கு கோலி, ரோஹித் ஆகியோரின் ஆதரவு மிகவும் முக்கியம் என கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இளம் கேப்டனாக கில் எடுக்கும் கடினமான முடிவுகளுக்கு மூத்த வீரர்களின் அனுபவம் உறுதுணையாக உள்ளது. 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு இந்தியா தயாராகும் நிலையில், கில் மற்றும் கம்பீர் கூட்டணி முக்கியத்துவம் பெறுகிறது. கோலி, ரோஹித் இருவரும் உலகக்கோப்பையில் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.

Team India: கில் மிகவும் அதிர்ஷ்டசாலி.. ரோஹித் – கோலியை குறித்து கம்பீர் கூறியது என்ன?
இந்திய அணியின் ஜாம்பவான்கள்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Sep 2026 08:00 AM IST

இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில்லுக்கு கீழும், டி20 போட்டியை ஷ்ரேயாஸ் ஐயருக்கு கீழும் கட்டமைத்து வருகிறது. இந்தநிலையில், இந்திய ஒருநாள் அணிக்கு தலைமை தாங்கும் சுப்மன் கில்லுக்குக் களத்திலும் களத்திற்கு வெளியேயும் ஆதரவளிக்க விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் இருப்பது அவரது அதிர்ஷ்டம். ஒரு இளம் கேப்டனாக கில் தனது பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறார் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறிப்பிட்டார்.

ALSO READ: ஆசியன் கேம் டார்க்கெட்.. இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது?

சுப்மன் கில் மீது நம்பிக்கை:

சுப்மன் கில் தனது ஒருநாள் கேப்டன்சி சாதனையை மேம்படுத்துவார் என்று கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், கம்பீர் மற்றும் சுப்மன் கில் இடையேயான கூட்டணி இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமானது.

ரோஹித்தின் எதிர்காலம் குறித்து சில சர்ச்சைகள் நிலவின. ஆனால் அவரும் கோலியும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, தாங்கள்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் முதுகெலும்பு என்பதையும், 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை தொடர்ந்து விளையாட விரும்புவதையும் நிரூபித்துள்ளனர்.

பயிற்சியாளர் கவுதம் கம்பீர் என்ன கூறினார்?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக ஜியோஸ்டாரிடம் பேசிய கவுதம் கம்பீர், “ஒருநாள் போட்டிகளில் கில் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனெனில், களத்திலும் களத்திற்கு வெளியேயும் அவருக்கு ஆதரவளிக்கும் ரோஹித் மற்றும் விராட் போன்ற வீரர்கள் அவருக்கு இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட்டில் எந்தவொரு வீரரையும் ஆடும் லெவனில் இருந்து நீக்குவது எப்போதுமே ஒரு கடினமான முடிவு. ஆனால், ஒரு இளம் கேப்டனாக அதைச் செய்யும்போது, ​​அது எந்தவொரு பயிற்சியாளருக்கோ அல்லது கேப்டனுக்கோ கூட ஒரு கடினமான முடிவாக இருக்கும். கில் இதுவரை அதைத்தான் செய்து வருகிறார். அவர் அனைத்து அம்சங்களிலும் உண்மையிலேயே உழைத்திருக்கிறார்” என்றார்.

தொடர்ந்து பேசிய கம்பீர், “  இருப்பினும், ரோஹித் மற்றும் விராட்டின் பரந்த அனுபவம், இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளில் அணியை வழிநடத்த கில்லுக்கு பெரிதும் உதவுகிறது. கில் அமைதியானவர், தன்னலமற்றவர் மற்றும் ஆக்ரோஷமானவர். ஒரு கேப்டனாக தனது அனைத்துப் பொறுப்புகளையும் அவர் இதுவரை மிகச் சரியான முறையில் நிறைவேற்றியுள்ளார்.

கில் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் கடினமான காலகட்டத்தை சந்தித்து வருகிறார். அவருக்கு எனது முழு ஆதரவும் உள்ளது. கில் சரியான திசையில் தொடர்ந்து செயல்பட்டு வந்தால், விரைவில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவார் என்ற தனது உறுதியான நம்பிக்கை உள்ளது.” என்றார்.

ALSO READ: வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஒருநாள் தொடர்.. திருவனந்தபுரம் வந்த கிங் கோலி!

கவுதம் கம்பீரின் கருத்தின்படி, 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான மாஸ்டர் பிளானை மிகவும் தெளிவுபடுத்தியுள்ளது. அனுபவம் வாய்ந்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் வரவிருக்கும் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் முக்கிய அங்கமாக இருப்பார்கள் என்பது உறுதியாகிறது.

Follow Us