AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்தியாவை திணறடிக்குமா? டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

NZ vs IND New Zealand T20I squad : இந்திய அணி அடுத்தடுத்து கிரிக்கெட் போட்டிகளில் களம் கண்டு வருகிறது. விரைவில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான 16 பேர் கொண்ட வலுவான அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது.

இந்தியாவை திணறடிக்குமா? டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
நியூசிலாந்து கிரிக்கெட்
C Murugadoss
C Murugadoss | Published: 23 Sep 2026 09:40 AM IST

இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான தனது அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது. மிட்செல் சான்ட்னர் தலைமையிலான 16 பேர் கொண்ட வலுவான அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடருக்காக இந்திய அணி நியூசிலாந்துக்குச் செல்லும்.

எந்தெந்த வீரர்களுக்கு இடம்?

நியூசிலாந்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16 வீரர்களில், 13 பேர் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற அதே வீரர்கள் ஆவர். சுழற்பந்து ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே ஆகியோர் காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் இருந்து ரச்சின் ரவீந்திரா விலகியுள்ளார். அவரது காயமே இதற்குக் காரணம் என நம்பப்படுகிறது. கணுக்கால் காயம் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் டி20 தொடருக்கான அணியில் இருந்து பென் சியர்ஸும் விலக்கப்பட்டுள்ளார்.

Also Read: தோனி-ஜாகீர் இடையே இப்படி ஒரு புரிதலா? ஆச்சர்யத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!

நியூசிலாந்து டி20 அணி vs இந்திய அணி

மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி ஃபெர்குசன், ஜாக் ஃபாக்ஸ், மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், டிம் சீஃபர்ட் மற்றும் நாதன் ஸ்மித்.

இந்தியா-நியூசிலாந்து டி20 தொடர் அட்டவணை

  • இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
  • முதல் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறும்.
  • இரண்டாவது போட்டி அக்டோபர் 24 ஆம் தேதி, அதே கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறும்.
  • மூன்றாவது டி20 போட்டி அக்டோபர் 27 ஆம் தேதி வெலிங்டனில் நடைபெறும்.
  • நான்காவது டி20 போட்டி அக்டோபர் 30 ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறும்.
  • இத்தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டி நவம்பர் 1 ஆம் தேதி ஹாமில்டனில் நடைபெறும்.

இந்த டி20 தொடரானது, 12 போட்டிகள் கொண்ட இந்தியா-நியூசிலாந்து தொடரின் ஒரு பகுதியாகும்.
ஐந்து டி20 போட்டிகள், நியூசிலாந்துக்கு இந்தியா மேற்கொள்ளும் 12 போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகும். இந்த 12 போட்டிகளில் ஐந்து டி20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கும். இதற்கான அணியை நியூசிலாந்து பின்னர் அறிவிக்கும். டி20 தொடரைத் தொடர்ந்து ஒருநாள் தொடரும், அதனைத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு இங்கே க்ளிக் செய்க!

Follow Us