IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஒருநாள் தொடர்.. திருவனந்தபுரம் வந்த கிங் கோலி!
Virat Kohli: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய வீரர்களை சோதித்து பார்க்க இந்த தொடர் ஒரு வாய்ப்பை வழங்கும். ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரும் இந்தியாவின் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் மீண்டும் இணைந்துள்ளனர்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான (IND vs WI) போட்டி ஒருநாள் போட்டி தொடருக்கு முன்னதாக, முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி (Virat Kohli) லண்டனில் வசித்து வரும் கோலி, இந்தியா தனது முதல் ஒருநாள் போட்டியை நடத்தும் திருவனந்தபுரத்தை தற்போது வந்தடைந்துள்ளார். ஒருநாள் போட்டி மீதமுள்ள இந்திய அணி நாளை அதாவது 2026 செப்டம்பர் 24ம் தேதி கூடிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 2026 செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும்.
ALSO READ: இந்தியாவை திணறடிக்குமா? டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு




வந்தடைந்த விராட் கோலி..
GOAT’s Own Country!
The ‘King’ @imVkohli has landed in our Kingdom #INDvsWI #TeamIndia #ODI #ViratKohli #Thiruvananthapuram @BCCI pic.twitter.com/vHsFmNb2IQ
— KCA (@KCAcricket) September 23, 2026
லண்டனில் இருந்து இந்தியா வந்த விராட் கோலி சாதாரண உடையில் காணப்பட்டார். அப்போது, கோலி விமான நிலையத்தை கடந்து சென்றபோது பாதுகாப்பு பணியாளர்களுடன் சென்றார். இந்திய அணி வீரர்கள் வருகின்ற 2026 செப்டம்பர் 25ம் தேதி மற்றும் 2026 செப்டம்பர் 26ம் தேதி பயிற்சி அமர்வுகளில் பங்கேற்கும்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய வீரர்களை சோதித்து பார்க்க இந்த தொடர் ஒரு வாய்ப்பை வழங்கும். ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரும் இந்தியாவின் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் மீண்டும் இணைந்துள்ளனர். அதேவேளையில், ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி மற்றும் பஞ்சாப் ஆல்ரவுண்டர் நமன் தீர் ஆகியோர் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் அழைக்கப்பட்டுள்ளனர்.
ALSO READ: இந்தியாவிற்கு வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி.. சுற்றுப்பயணத்தின் தொடக்க தேதி இதுவா?
இந்திய அணி நாளை அதாவது 2026 செப்டம்பர் 24ம் தேதி கேரள தலைநகரமான திருவனந்தபுரம் செல்லும். ஷ்ரேயாஸ் ஐயர், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அக்சர் படேல் போன்ற வீரர்கள் 2026 ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதால், இந்திய அணியில் பல முக்கிய வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்கள். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 2026 செப்டம்பர் 27ம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்கி, அதனை தொடர்ந்து 2026 செப்டம்பர் 30ம் தேதி குவஹாத்தியிலும், 2026 அக்டோபர் 3ம் தேதி நியூ சண்டிகரிலும் போட்டிகள் நடைபெறும்.