IND vs JAP: முதல் பந்தில் அதிக முறை டக் அவுட்.. ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய அபிஷேக் சர்மா!
Abhishek Sharma Unwanted Record: ஜப்பானுக்கு எதிராக ஆட்டமிழந்ததன்மூலம் அபிஷேக் சர்மா இந்த 2026ம் ஆண்டில் மட்டும் பத்தாவது முறையாக டக் அவுட் ஆனார். ஓர் ஆண்டில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் என்ற சாதனையை அபிஷேக் சர்மா, ரஷித் கான் மற்றும் ஷதாப் கான் ஆகியோரிடம் இருந்து பெற்றுள்ளார்.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் (2026 Asian Games) தொடக்கம் அபிஷேக் சர்மாவுக்கு ஏமாற்றமளித்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அபாரமான பேட்டிங் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா, ஜப்பானுக்கு எதிரான போட்டியில் ஒரு பெரிய சிக்ஸ் அடிக்க முயன்றபோது, தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். ஜப்பானுக்கு எதிரான போட்டியில் (IND vs JAP) முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அபிஷேக் சர்மா ஒரு விரும்பத்தகாத சாதனையை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா டக் அவுட் ஆவது இது ஐந்தாவது முறையாகும்.
ALSO READ: இந்திய மகளிர் அணியில் கையில் தங்கம்.. வெள்ளியுடன் வெளியேறும் இலங்கை மகளிர்!
முதல் பந்திலேயே அதிக முறை டக் அவுட்:
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் பந்திலேயே அதிக முறை ஆட்டமிழந்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா தற்போது பெற்றுள்ளார். இதற்கு முன்பு, இந்த மோசமான சாதனையை முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பெயரில் இருந்தது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா ஏற்கனவே 4 முறையும், சஞ்சு சாம்சன் 3 முறையும், கே.எல். ராகுல் 2 முறையும் முதல் பந்தில் தங்களது விக்கெட்களை இழந்துள்ளனர்.
2026ம் ஆண்டில் மட்டும் 10வது முறை டக் அவுட்:
Most ducks in a calendar year in T20s:
10 – Abhishek Sharma, 2026*
9 – Rashid Khan, 2019
9- Shadab Khan, 2024Abhishek Sharma now has 10 ducks in a calendar year in T20s, the most by any batter. 🤯 pic.twitter.com/nNumlIzx16
— Rayham. (@RayhamUnplugged) September 22, 2026
ஜப்பானுக்கு எதிராக ஆட்டமிழந்ததன்மூலம் அபிஷேக் சர்மா இந்த 2026ம் ஆண்டில் மட்டும் பத்தாவது முறையாக டக் அவுட் ஆனார். ஓர் ஆண்டில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் என்ற சாதனையை அபிஷேக் சர்மா, ரஷித் கான் மற்றும் ஷதாப் கான் ஆகியோரிடம் இருந்து பெற்றுள்ளார். இவ்விரு வீரர்களும் தலா 9 முறை டக் அவுட் ஆனார்கள்.
ALSO READ: லாக் செய்ய நினைத்த ஜப்பான்.. லக்கில் இந்திய அணி த்ரில் வெற்றி!
ஜப்பானிய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் சார்லி ஹெப்டோவின் பந்தில் அபிஷேக் சர்மா ஒரு பெரிய ஷாட் ஆட முயன்றார். ஆனால் அது பலனளிக்கவில்லை. பந்து பேட்டில் சரியாகப் படாததால் அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழந்தார். இதன்மூலம், முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து அபிஷேக் சர்மா ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். இப்போது அபிஷேக் சர்மா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரவிருக்கும் ஆட்டங்களில் சிறப்பாக மீண்டு வந்து இந்த ஏமாற்றமளிக்கும் ஆட்டத்தை பின்னுக்குத் தள்ள முயற்சிப்பார்.