IND vs WI: இந்தியாவிற்கு வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி.. சுற்றுப்பயணத்தின் தொடக்க தேதி இதுவா?
West Indies Tour of India 2026: வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப்பயணம் வருகின்ற 2026 செப்டம்பர் 27ம் தேதி முதல் ஒருநாள் போட்டியுடன் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, 2026 செப்டம்பர் 30ம் தேதி 2வது ஒருநாள் போட்டியும், 2026 அக்டோபர் 3ம் தேதி 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியும் நடைபெறும்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணத்திற்காக இந்தியா வந்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணிக்கு (Indian Cricket Team) எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 சர்வதேச போட்டிகள் உட்பட 8 போட்டிகளில் விளையாடும். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் இந்தத் தொடருக்கான தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளன. ஒருநாள் போட்டிகளில் சுப்மன் கில்லும், டி20 போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயரும் (Shreyas Iyer) இந்திய அணியை வழிநடத்துவார்கள். இதற்கிடையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொறுப்பு ஷாய் ஹோப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹோப் டி20 மற்றும் ஒருநாள் என 2 அணியையும் வழிநடத்துவார்.
ALSO READ: இந்தியாவை திணறடிக்குமா? டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப்பயணம் வருகின்ற 2026 செப்டம்பர் 27ம் தேதி முதல் ஒருநாள் போட்டியுடன் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, 2026 செப்டம்பர் 30ம் தேதி 2வது ஒருநாள் போட்டியும், 2026 அக்டோபர் 3ம் தேதி 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியும் நடைபெறும். பின்னர், 2026 அக்டோபர் 6 முதல் 17 வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும்.




இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் முழு அட்டவணை:
- 2026 செப்டம்பர் 27 – முதல் ஒருநாள் போட்டி – கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம் (பிற்பகல் 2 மணி)
- 2026 செப்டம்பர் 30 – 2வது ஒருநாள் போட்டி – பார்சபாரா கிரிக்கெட் மைதானம், குவஹாத்தி (பிற்பகல் 2 மணி)
- 2026 அக்டோபர் 3 – 3வது ஒருநாள் போட்டி – முல்லன்பூர் மைதானம், நியூ சண்டிகர் (பிற்பகல் 2 மணி)
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் முழு அட்டவணை:
- 2026 அக்டோபர் 6 – முதல் டி20 போட்டி – ஏகானா ஸ்டேடியம் , லக்னோ – இரவு 7 மணி முதல்
- 2026 அக்டோபர் 9 – இரண்டாவது டி20 போட்டி – ஜே.எஸ்.சி.ஏ ஸ்டேடியம், ராஞ்சி – இரவு 7 மணி முதல்
- 2026 அக்டோபர் 11 – மூன்றாவது டி20 போட்டி – ஹோல்கர் ஸ்டேடியம், இந்தூர் – இரவு 7 மணி முதல்
- 2026 அக்டோபர் 14 – நான்காவது டி20 போட்டி – ராஜீவ் காந்தி ஸ்டேடியம், ஹைதராபாத் – இரவு 7 மணி முதல்
- 2026 அக்டோபர் 17 – ஐந்தாவது டி20 போட்டி – எம்.சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு – இரவு 7 மணி முதல்
ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் 15 பேர் கொண்ட அணி :
ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, ஜான் கேம்ப்பெல், கீஸி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், விட்டெல் லாட்ஜ், கூடகேஷ் மோட்டி, கீமோ பால், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு மற்றும் ஜெய்டன் சீல்ஸ்.
ALSO READ: ஆசியன் கேம் டார்க்கெட்.. இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது?
ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி , கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், துருவ் ஜூரல் (ரிசர்வ் விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் பிஹர் கிருஷ்ணா, குல்தீப் பிஹர் கிருஷ்ணா, யாஷ் தாக்கூர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் நமன் திர்