AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

2026 Asian Games: வெற்றியாளருக்கு பதக்கத்துடன் பொம்மை.. ஜப்பான் வழங்கும் சிறப்பு பரிசு.. அர்த்தம் என்ன?

Aichi-Nagoya 2026 Asian Games: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களுடன் வழங்கப்பட்ட ஜப்பானிய பொம்மைகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன. இது போட்டியின் அதிகாரப்பூர்வ நினைவுப் பரிசு மற்றும் ஜப்பான் நாட்டின் கலாச்சார மரபு ஆகும். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கத்துடன் சிறப்பு பொம்மைகளையும் பெற்றது. இத்தகைய பொம்மைகள் வெற்றியாளர்களுக்கு ஒரு சிறப்புப் பரிசாக அமைகின்றன.

2026 Asian Games: வெற்றியாளருக்கு பதக்கத்துடன் பொம்மை.. ஜப்பான் வழங்கும் சிறப்பு பரிசு.. அர்த்தம் என்ன?
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Sep 2026 18:47 PM IST

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களுடன் ஜப்பானிய பொம்மைகள் ஏன் வழங்கப்படுகின்றன என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (2026 Asian Games) தங்கப் பதக்கம் வென்ற பிறகு, இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் (Indian Womens Cricket Team) கைகளில் அவர்களின் பதக்கங்களுடன் சிறப்புப் பொம்மைகளும் வழங்கப்பட்டன. இந்தப் பொம்மைகள் ஏன் வழங்கப்படுகின்றன மற்றும் ஜப்பானிய கலாச்சாரத்துடன் அவற்றுக்கு என்ன தொடர்பு உள்ளது உள்ளிட்ட கேள்விகள் எழுகிறது. இது தொடர்பான முழு விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான் மகளிர்.. கைக்கு வந்த வெண்கல பதக்கம்!

பொம்மைகள் வழங்கப்படுவது ஏன்..?

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. மேலும், பதக்கத்துடன் புகைப்படத்தில் காணப்படும் தங்க நிறத்திலான பொம்மைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. இதுமட்டுமின்றி, வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை மகளிர் அணிக்கு சில்வர் நிறத்திலான பொம்மைகளும், வெண்கலப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணிக்கு வெண்கல நிறத்தை கொண்ட பொம்மைகளும் வழங்கப்பட்டன.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இறுதிப் போட்டியில், இந்தியா இலங்கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ரன்களும், ரிச்சா கோஷ் 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ரன்களும் எடுத்தனர்.

பதக்கத்துடன் வழங்கப்பட்ட பொம்மைகள்:

தங்கப் பதக்கம் வென்ற பிறகு, இந்திய விளையாட்டு வீரர்கள் மேடையில் தங்கள் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர். பதக்கங்களுடன், ஜப்பானிய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் அழகான பொம்மைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்தப் பொம்மைகள் சமூக ஊடகங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

ALSO READ: இந்திய மகளிர் அணியில் கையில் தங்கம்.. வெள்ளியுடன் வெளியேறும் இலங்கை மகளிர்!

இந்தப் பொம்மைகள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ சின்னம் தொடர்பான நினைவுப் பரிசுகளாகும். சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, பதக்கங்களுடன் இதுபோன்ற நினைவுப் பரிசுகளை வழங்குவது போட்டியை நடத்தும் ஜப்பான் நாட்டின் ஒரு பாரம்பரியம் ஆகும். எனவே, இந்தப் பொம்மைகள் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பரிசாக இருப்பது மட்டுமல்லாமல், ஜப்பானில் வென்ற தங்கப் பதக்கத்தின் ஒரு சிறப்பு நினைவாகவும் இந்திய மகளிர் அணிக்கு அமையும். இந்த வெற்றியின் மூலம், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தனது தங்கப் பதக்கக் கணக்கைத் தொடங்கியுள்ளது. மேலும், மகளிர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.

Follow Us