AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND W vs SL W: 79 ரன்கள் குவித்த ஸ்மிருதி.. இலங்கை அணிக்கு 217 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்திய மகளிர்!

2026 Asian Games Final: 2026 ஆசிய விளையாட்டு போட்டி இறுதிப்போட்டியில் இன்று அதாவது 2026 செப்டம்பர் 22ம் தேதி இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. 

IND W vs SL W: 79 ரன்கள் குவித்த ஸ்மிருதி.. இலங்கை அணிக்கு 217 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்திய மகளிர்!
Ind W Vs Sl W 1st
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 22 Sep 2026 12:37 PM IST

2026 ஆசிய விளையாட்டு போட்டி (2026 Asian Games) இறுதிப்போட்டியில் இன்று அதாவது 2026 செப்டம்பர் 22ம் தேதி இந்திய மகளிர் அணியும் (Indian Womens Cricket Team), இலங்கை மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸின் போது, ​​நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா, மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் நிகழ்த்தாத ஒரு சாதனையைப் படைத்தார்.

ALSO READ: தடை போட வரும் மழை.. நடைபெறுமா IND W vs SL W இறுதிப்போட்டி?

தொடக்க ஜோடி 99 ரன்கள் பார்ட்னர்ஷிப்:

இறுதிப் போட்டியில் இந்தியா மிகவும் ஆக்ரோஷமான தொடக்கத்தைக் கண்டது. இன்னிங்ஸைத் தொடங்கிய ஷெஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா, இலங்கை பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து, வெறும் 9.2 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் என்ற அதிரடியான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஷெஃபாலி வர்மா ஆக்ரோஷமாக பேட்டிங் செய்து, 29 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களின் உதவியுடன் 48 ரன்கள் எடுத்தார். அவர் தனது அரைசதத்தை வெறும் 2 ரன்களில் தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

மந்தனா 11,000 சர்வதேச ரன்கள்:

ஷஃபாலியின் ஆட்டமிழப்பிற்குப் பிறகும், ஸ்மிருதி மந்தனா வெறும் 45 பந்துகளில் 175.56 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் 79 ரன்கள் குவித்து ஒரு மறக்கமுடியாத இன்னிங்ஸை ஆடினார். இதில் 5 பவுண்டரிகளும் 7 பிரம்மாண்டமான சிக்ஸர்களும் அடங்கும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸின் போது, ​​ஸ்மிருதி மந்தனா சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை எட்டிய சாதனையை படைத்தார். மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்த மாயாஜால இலக்கை எட்டிய உலகின் முதல் மற்றும் ஒரே வீராங்கனை என்ற பெருமையை மந்தனா பெற்றுள்ளார். கடைசி நேரத்தில் இந்திய மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் களமிறங்கி வெறும் 22 பந்துகளில் 49 ரன்கள் குவிக்க, இந்திய மகளிர் அணி 216 ரன்கள் என்ற பிரமாண்ட ஸ்கோரை பதிவு செய்தது.

ALSO READ: ஒரு படியில் தங்கப் பதக்கம்.. வெல்லப்போவது யார்..? மோதும் இந்திய மகளிர் – இலங்கை மகளிர்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர்

மகளிர் ஆசியக் கோப்பையில் இதுவே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பு எந்த அணியும் 216 ரன்களை எட்டியதில்லை. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு அணி 200 ரன்களைக் கடப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2023 ஆசிய விளையாட்டு போட்டி சீசனில் மங்கோலியாவுக்கு எதிராக ஹாங்காங் இந்தச் சாதனையை நிகழ்த்தியது.

 

Follow Us