AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ICC T20 Ranking: டி20யில் 2வது இடத்திற்கு சரிந்த இந்தியா.. முதலிடத்திற்கு திரும்பிய இங்கிலாந்து!

ICC Mens T20 Ranking: ஹாரி புரூக் கேப்டனானதிலிருந்து இங்கிலாந்தின் டி20 ஆட்டம் சிறப்பாக இருந்து வருகிறது. ஹாரி புரூக்கின் தலைமையில், இங்கிலாந்து 26 போட்டிகளில் 23-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒருபுறம், இங்கிலாந்து தனது சமீபத்திய தொடரில் இலங்கையை வீழ்த்தியது. மறுபுறம், இந்திய அணி ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தானை தொடர்ந்து வீழ்த்தி வருகிறது.

ICC T20 Ranking: டி20யில் 2வது இடத்திற்கு சரிந்த இந்தியா.. முதலிடத்திற்கு திரும்பிய இங்கிலாந்து!
இந்திய கிரிக்கெட் அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Sep 2026 12:42 PM IST

2026 ஆசிய விளையாட்டு போட்டிக்கு மத்தியில் டி20 சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய ஆடவர் அணி (Indian Cricket Team) பின்னடைவை சந்தித்துள்ளது. சமீபத்திய தொடரில் ஆப்கானிஸ்தானை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வீழ்த்திய போதிலும், இந்திய அணி தனது தரவரிசையை இழந்துள்ளது (ICC T20 Ranking) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், இங்கிலாந்து டி20 சர்வதேச தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது. இருப்பினும், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் தற்போது தலா 269 மதிப்பீட்டுப் புள்ளிகளைக் கொண்டுள்ளன.

ALSO READ: ஆசிய போட்டிக்கு நடுவே வரும் நக்வி.. பதக்கத்தை பெறுமா இந்திய அணி?

ஹாரி புரூக் கேப்டனானதிலிருந்து இங்கிலாந்தின் டி20 ஆட்டம் சிறப்பாக இருந்து வருகிறது. ஹாரி புரூக்கின் தலைமையில், இங்கிலாந்து 26 போட்டிகளில் 23-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒருபுறம், இங்கிலாந்து தனது சமீபத்திய தொடரில் இலங்கையை வீழ்த்தியது. மறுபுறம், இந்திய அணி ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தானை தொடர்ந்து வீழ்த்தி வருகிறது. இருந்தபோதிலும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 அணி, தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு சரிந்துள்ளது.

2வது இடத்திற்கு சரிந்த இந்திய அணி:

ஐசிசி டி20 தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்திலும், இந்திய அணி இரண்டாமிடத்திலும் உள்ளன. இரு அணிகளும் 269 மதிப்பீட்டுப் புள்ளிகளைப் பெற்றுள்ளன. இருப்பினும் இந்த 269 என்ற எண்ணிக்கை ஒரு தோராயமான மதிப்பீடே ஆகும். இந்தியா 268.76 மதிப்பீட்டுப் புள்ளிகளையும், இங்கிலாந்து 268.80 புள்ளிகளையும் பெற்றுள்ளன. இங்கிலாந்து வெறும் 0.04 புள்ளிகள் வித்தியாசத்தில் மதிப்பீட்டில் முன்னேறியுள்ளது.

டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா தற்போது உலகத் தரவரிசையில் 3வது இடத்திலும், நியூசிலாந்து 4வது இடத்திலும் உள்ளன. தென்னாப்பிரிக்கா 5வது இடத்திலும், பாகிஸ்தான் 6வது இடத்திலும் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஏழாவது இடத்தில் உள்ளது, ஆனால் அவர்கள் தங்களின் வரவிருக்கும் டி20 தொடரில் இந்தியாவைத் தோற்கடித்தால், முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேற வாய்ப்புள்ளது.

  • இங்கிலாந்து – 269
  • இந்தியா – 269
  • ஆஸ்திரேலியா – 260
  • நியூசிலாந்து – 247
  • தென்னாப்பிரிக்கா – 243
  • பாகிஸ்தான் – 240
  • வெஸ்ட் இண்டீஸ் – 234
  • வங்கதேசம் – 224
  • இலங்கை – 220
  • ஆப்கானிஸ்தான் 220

ALSO READ: இந்திய வீரர்களுக்கு அன்பிட் ஜெர்சி.. தலையிட்ட பிசிசிஐ.. என்ன நடந்தது..?

இந்திய அணி தொடர்ச்சியாக 2 முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இருப்பினும், கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அவருக்கு முதல் சவாலாக அமைந்தது வெளிநாட்டு சுற்றுப்பயணம்தான். அதில், இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இருப்பினும், பின்னர் இந்தியா ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்களை வென்றது.

Follow Us