Team India: அடுத்த 3 நாட்களில் இந்திய அணியின் போட்டி.. யாருடன், எப்போது மோதல்..?
Indian Cricket Team Next Match: ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, ஒரே ஒரு டி20 போட்டிக்காக ஜப்பானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டி, இந்தியா-ஜப்பான் தூதரக உறவுகளின் 75வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும்.
இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு (IND vs AFG) எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. டெல்லியில் ஆப்கானிஸ்தான் நடத்திய இத்தொடரில், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் அபாரமாக தொடரை வென்றது. இதனை தொடர்ந்து, இந்தியாவின் அடுத்த போட்டி எப்போது, எந்த அணிக்கு எதிராக விளையாடும் என்ற கேள்வி எழுகிறது. இந்தநிலையில், வருகின்ற 2026 செப்டம்பர் 22 ஆம் தேதி இந்திய அணி தனது அடுத்த வரலாற்றுப் போட்டியில் விளையாட உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்குத் தொடங்கும்.
ALSO READ: பெரிய மனசு வேணும்.. வெற்றியை பகிர்ந்தளித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. நெகிழ்ந்தபோன ஆப்கானிஸ்தான்!
எந்த அணிக்கு எதிராக இந்திய அணி களமிறங்கும்..?
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, ஒரே ஒரு டி20 போட்டிக்காக ஜப்பானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டி, இந்தியா-ஜப்பான் தூதரக உறவுகளின் 75வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும். இந்தப் போட்டி ‘ஸ்போர்ட் 75’-இன் ஒரு முன்னெடுப்பாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் போட்டிக்கு ‘சுசுகி கோப்பை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.




இந்திய அணியின் கேப்டன் யார்..?
இந்தப் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக வழக்கமான டி20 கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், ஜப்பான் அணியின் கேப்டனாக கெண்டல் கடோவாகி-ஃபிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளில் ஜப்பானின் முன்னணி ரன் குவிப்பாளராக கடோவாகி-ஃபிளெமிங் திகழ்கிறார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆயத்தப் பணிகளுக்கும் இந்தப் போட்டி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்தியா – ஜப்பான் டி20 போட்டியின் முழு அட்டவணை
- போட்டி நடைபெறும் நாள்: 2026 செப்டம்பர் 22
- இந்தியா போட்டி தொடங்கும் நேரம் (IST)- காலை 9:30 மணி
- போட்டி நடைபெறும் இடம் – சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானம், டோச்சிகி மாகாணம்
டி20 போட்டிக்கான இந்திய அணி
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், திலக் வர்மா, வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், விபராஜ் நிகாம், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், யாஷ் தக்பூர் சிங்.
டி20 போட்டிக்கான ஜப்பான் அணி
கெண்டல் ஃப்ளெமிங் (கேப்டன்), அலஸ்டர் ஃப்ளெமிங், கோஹெய் குபோடா, டெக்லான் சுஸுகி, சுயோஷி தகாடா, மகோடோ தனியாமா, லாச்லான் யமமோட்டோ லேக், பெஞ்சமின் இடோ டேவிஸ், ஜேக் குசுடா நேர்ன், ரியோ சகுரானோ தாமஸ், இப்ராஹிம் தகாஹாஷி, ஷோமா ஸ்லாட்டரு, ஷோமா ஸ்லேட்டரு (விக்கெட் கீப்பர்), சார்லி ஹரா-ஹின்சுவ்.