PAK W vs BAN W: வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான் மகளிர்.. கைக்கு வந்த வெண்கல பதக்கம்!
Pakistan W vs Bangladesh W: 146 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய வங்கதேசம், ஸ்கோர் 20-ஐ எட்டுவதற்கு முன்பே 3 முக்கிய விக்கெட்க்ளை இழந்து மோசமான தொடக்கத்தைப் பெற்றது. கேப்டன் நிகர் சுல்தானா (25) மற்றும் ஷர்மின் அக்தர் (46) ஆகியோர் இன்னிங்ஸைக் காப்பாற்ற முயன்றனர்.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டி (2026 Asian Games) மகளிர் கிரிக்கெட் பிரிவில் பாகிஸ்தான் மகளிர் அணி (Pakistan Womens Cricket Team) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இன்று அதாவது 2026 செப்டம்பர் 22ம் தேதி நடைபெற்ற வெண்கலப் பதக்கப் போட்டியில், பாகிஸ்தான் மகளிர் அணி வங்கதேசத்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில், 12 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் இலங்கையிடமும், வங்கதேசம் இந்தியாவிடமும் தோல்வியடைந்தது. தற்போது, தங்கப் பதக்கத்திற்கான போட்டி இன்று அதாவது 2026 செப்டம்பர் 22ம் தேதி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடைபெற்று வருகிறது.
ALSO READ: இந்திய வீரர்கள் கைகுலுக்காத விவகாரம்.. கபில் தேவ் கொடுத்த ஷாக் பதில்!
போட்டியில் நடந்தது என்ன?
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த பாகிஸ்தான் அணிக்கு ஏமாற்றமளிக்கும் தொடக்கம் கிடைத்தது . 12வது ஓவரின் முடிவில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு வெறும் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்த முக்கியமான தருணத்தில், கேப்டன் பாத்திமா சனா பொறுப்பேற்று, வெறும் 30 பந்துகளில் 45 ரன்கள் என்ற அதிரடியான ஆட்டத்தின் மூலம் அணியை ஒரு சவாலான மொத்த ரன்களுக்குக் கொண்டு சென்றார். இதன்மூலம், 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் குல் பெரோசா 23 பந்துகளில் 31 ரன்களும், ஆலியா ரியாஸ் 25 ரன்களும் எடுத்தனர். வங்கதேச சார்பில், நஹிதா அக்தர், ஷோர்னா அக்தர் மற்றும் ரிது மோனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
146 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய வங்கதேசம், ஸ்கோர் 20-ஐ எட்டுவதற்கு முன்பே 3 முக்கிய விக்கெட்க்ளை இழந்து மோசமான தொடக்கத்தைப் பெற்றது. கேப்டன் நிகர் சுல்தானா (25) மற்றும் ஷர்மின் அக்தர் (46) ஆகியோர் இன்னிங்ஸைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், குறிப்பிட்ட ரன் ரேட் அழுத்தத்தால் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு வெறும் 114 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
ALSO READ: ஒரு படியில் தங்கப் பதக்கம்.. வெல்லப்போவது யார்..? மோதும் இந்திய மகளிர் – இலங்கை மகளிர்!
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அபாரம்:
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உம்-இ-ஹானி தனது அபாரமான பந்துவீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, வங்கதேசத்தின் மிடில் ஆர்டரை சிதைத்தார். 20 ஓவர்களில் இலக்கை எட்டுவதற்கு வங்கதேசம் 31 ரன்கள் பின்தங்கியிருந்தது. 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து வங்கதேசத்தால் 114 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இது 2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தானின் இரண்டாவது பதக்கமாகும்.


