AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Asian Games 2026: பரபரப்பான பேட்மிண்டன் போட்டி.. வெண்கலம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரன்.. முதல்வர் விஜய் வாழ்த்து!

India Men's Badminton Team Secures Bronze: ஆசிய விளையாட்டு 2026 ஆடவர் பேட்மிண்டன் அணி அரையிறுதியில் இந்தியா சீனாவிடம் தோற்று வெண்கலம் வென்றது. இது இந்தியாவின் 12வது பதக்கம். தமிழக வீரர் ஹரிஹரன் இடம்பெற்ற இக்குழுவின் வெற்றியையும், அவரது திறமையையும் பாராட்டி தமிழ்நாடு முதல்வர் விஜய் ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார். இந்தியாவின் துணிச்சலான ஆட்டம் வெள்ளிப் பதக்க வாய்ப்பைத் தவறவிட்டாலும், அணிக்கு பெருமை சேர்த்தது.

Asian Games 2026: பரபரப்பான பேட்மிண்டன் போட்டி.. வெண்கலம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரன்.. முதல்வர் விஜய் வாழ்த்து!
இந்திய பேட்மிண்டன் அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Sep 2026 19:42 PM IST

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Asian Games 2026) இந்தியா தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இன்று அதாவது 2026 செப்டம்பர் 23ம் தேதி ஆடவர் பேட்மிண்டன் அணி அரையிறுதிப் போட்டியில் சீனாவிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியின் மூலம், இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை மட்டுமே வெல்ல முடிந்தது. இருப்பினும், இது நடப்பு 2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணியின் (Indian Team) 12வது பதக்கமாகும். இப்போட்டியில் இந்தியா கடைசியாக 2023-ல் ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் தங்கம் வென்றனர்.

ALSO READ: வெற்றியாளருக்கு பதக்கத்துடன் பொம்மை.. ஜப்பான் வழங்கும் சிறப்பு பரிசு.. அர்த்தம் என்ன?

காலிறுதிப் போட்டி கலக்கிய இந்தியா:

காலிறுதிப் போட்டியில் ஜப்பானை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதற்கு முன்னதாக, 5-வது சுற்றில் வங்கதேசத்தை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்திருந்தது. இருப்பினும், இந்த சிறப்பான ஆட்டம் அரையிறுதியில் தொடரவில்லை. நடப்பு சாம்பியனான சீனாவுக்கு எதிராக, இந்திய அணி ஒரு வலுவான ஒற்றையர் அணியையும் ஒரு சிறந்த இரட்டையர் கூட்டணியையும் எதிர்கொண்டது. அரையிறுதிப் போட்டியை லக்ஷ்யா சென், ஷி யூகியை எதிர்கொண்டு தொடங்கினார். லக்ஷ்யா கடுமையாகப் போராடி, ஆட்டத்தை நெருக்கமாகக் கொண்டு சென்றாலும், இறுதியில் 16-21, 18-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

பின்னர் சத்விக் மற்றும் சிராக் இந்திய அணிக்காக இரண்டாவது இரட்டையர் ஆட்டத்தில் சீனாவின் லியாங் வெய்காங் மற்றும் வாங் சாங் இணையை 21-11, 22-20 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தனர். ஆட்டம் இப்போது சமநிலையில் இருந்தது. இறுதி சுற்றில் இந்தியா செல்வது மிகவும் சுலபம் என்று நினைத்தபோது, கடைசி இரண்டு ஆட்டங்களில் சீனா ஒரு வலுவான எதிர் தாக்குதலைத் தொடுத்தது.

மூன்றாவது போட்டியில், ஆயுஷ் ஷெட்டி, லி ஷிஃபெங்கை எதிர்கொண்டார். சீன வீரர் ஆயுஷை 21-19, 21-13 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார். பின்னர், நான்காவது மற்றும் கடைசி ஆட்டத்தில், இந்தியாவை சேர்ந்த எம்.ஆர். அர்ஜுன் மற்றும் ஹரிஹரன் அம்சகருணன் ஆகியோர் ஜி டிங் மற்றும் லியு யியை எதிர்கொண்டனர். இந்த போட்டியில் சீன ஜோடி இந்தப் போட்டியை 21-16, 17-21, 21-9 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, அரையிறுதி வெற்றியை உறுதி செய்தது. இதையடுத்து, தமிழக வீரர் ஹரிஹரன் அம்சகருணன் மற்றும் எம்.ஆர்.அர்ஜுன் ஜோடியால் வெண்கல பதக்கம் மட்டுமே வெல்ல முடிந்தது.

ALSO READ: ஆசியன் கேம் டார்க்கெட்.. இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாழ்த்து:


2026 ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனுடன் அவரது திறமையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us