Asian Games 2026: காலிறுதியில் 8 அணிகள்.. எந்தெந்த அணிகள் யாருடன் மோதல்..? முழு அட்டவணை இதோ!
2026 Asian Games Men's Quarterfinals: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங், நேபாளம், மலேசியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்தியா தனது முதல் காலிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் காலிறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் (Asian Games 2026) கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ளன. தற்போது காலிறுதிப் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா (Indian Cricket Team), பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் ஏற்கனவே காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன. இதனுடன் லீக் சுற்று முடிவின் அடிப்படையில் ஹாங்காங், நேபாளம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளும் முன்னேறியுள்ளன. காலிறுதிப் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும். மொத்தம் 4 காலிறுதிப் போட்டிகள் நடைபெறும். அந்தவகையில், காலிறுதிப் போட்டிகளுக்கான அட்டவணையை பற்றி தெரிந்து கொள்வோம்.
லீக் சுற்றில் 6 அணிகள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. குழு A-வில் நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளும், குழு B-யில் மலேசியா, ஹாங்காங் மற்றும் ஓமன் ஆகிய அணிகளும் இடம்பெற்றிருந்தன. குழு A-விலிருந்து நேபாளமும் ஆப்கானிஸ்தானும் மற்றும் குழு B-விலிருந்து மலேசியாவும் ஹாங்காங்கும் காலிறுதிக்குத் தகுதி பெற்றன.
ALSO READ: மழையால் ஆப்கானிஸ்தானுக்கு அடித்த லக்! காலிறுதியில் இந்திய அணியுடன் மோதல்!




2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் காலிறுதிப் போட்டி அட்டவணை
- முதல் காலிறுதிப் போட்டி – பாகிஸ்தான் vs ஹாங்காங் (2026 செப்டம்பர் 28, காலை 5:30 மணி)
- 2வது காலிறுதிப் போட்டி – இந்தியா vs ஆப்கானிஸ்தான் (2026 செப்டம்பர் 28, காலை 10:30 மணி)
- 3வது காலிறுதிப் போட்டி – இலங்கை vs நேபாளம் (2026 செப்டம்பர் 29, காலை 5:30 மணி)
- 4வது காலிறுதிப் போட்டி – வங்கதேசம் vs மலேசியா (2026 செப்டம்பர் 29, காலை 10:30 மணி)
அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி அட்டவணை:
- முதல் அரையிறுதிப் போட்டி – (2026 அக்டோபர் 1, காலை 5:30 மணி)
- 2வது அரையிறுதிப் போட்டி -(2026 அக்டோபர் 1, காலை 10:30 மணி)
- 3ம் இடத்திற்கான போட்டி -(2026 அக்டோபர் 3, காலை 5:30 மணி)
தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டி- (2026 அக்டோபர் 3, காலை 10:30 மணி)
போட்டியை எங்கே நேரலையில் பார்க்கலாம்?
2026 ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டிகளின் அனைத்து காலிறுதிப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள், வெண்கலம் மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை நிஷின், கோரோகி விளையாட்டுப் பூங்காவில் நடைபெறும். அனைத்துப் போட்டிகளையும் சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் தொலைக்காட்சியில் நேரலையாகக் காணலாம். மொபைல் பார்வையாளர்கள் சோனி லிவ் செயலியில் போட்டிகளைக் கண்டு மகிழலாம்.
ALSO READ: இந்தியாவிற்கு 3வது தங்கம்.. கபடி மூலம் கோல்ட் பெற்று கொடுத்த சிங்க பெண்கள்!
ஆசிய விளையாட்டில் மழையா?- ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் காலிறுதியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும்போது, கனமழை, போதிய பயிற்சியின்மை மற்றும் சவாலான சூழலில் மேற்கொள்ளப்பட்ட தயாரிப்புப் பணிகள் ஆகியவற்றை ஒருபோதும் சாக்குப்போக்குகளாகக் கூறமாட்டோம்.எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள ஒரு தொழில்முறை அணி தயாராக இருக்க வேண்டும் என்று ஷ்ரேயாஸ் ஐயர் வலியுறுத்தினார்.