AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Asian Games 2026: தமிழ்நாட்டின் பெருமை! கம்பூன்றித் தாண்டும் போட்டியில் வெண்கலம்.. பரணிகாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

Baranica Elangovan Wins Bronze: 2026 ஜப்பான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழகத்தின் பரணிகா இளங்கோவன், மகளிர்க்கான கம்பூன்றித் தாண்டும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 4.15 மீட்டர் உயரம் தாண்டி, ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்தியாவுக்கு இப்போட்டியில் கிடைத்த முதல் பதக்கம் இது. மயிலாடுதுறை குத்தலத்தைச் சேர்ந்த பரணிகாவின் இந்த வரலாற்றுச் சாதனை, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது. அவரது கடும் உழைப்பை பாராட்டி முதலமைச்சர் விஜய் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

Asian Games 2026: தமிழ்நாட்டின் பெருமை! கம்பூன்றித் தாண்டும் போட்டியில் வெண்கலம்.. பரணிகாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!
பரணிகா இளங்கோவன்Image Source: The Khel India
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Sep 2026 21:32 PM IST

ஜப்பானில் நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (2026 Asian Games) இந்திய தடகளத்திற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. மகளிர்க்கான கம்பூன்றித் தாண்டும் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 வயதான வீராங்கனை பரணிகா இளங்கோவன் (Baranica Elangovan) 4.15 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில், ஆண்கள் அல்லது மகளிர் என எந்தப் பிரிவிலும் கம்பூன்றித் தாண்டும் போட்டியில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். இந்தப் போட்டியில், பரணிகா மற்றும் போலினா இவனோவா இருவரும் 4.15 மீட்டர் உயரம் தாண்டினர். அதேநேரத்தில். இருவரும் 4.25 மீட்டர் தடையைத் தாண்டத் தவறினர். இதன் காரணமாக, இரு வீராங்கனைகளுக்கும் கூட்டாக வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.

ALSO READ: படையெடுக்கும் தங்கம், வெள்ளி, வெண்கலம்.. இந்தியா இதுவரை வென்ற பதக்க எண்ணிக்கை!

யார் இந்த பரணிகா..?


தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள குத்தலம் கிராமத்தைச் சேர்ந்த பரணிகா, ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை இளங்கோவன் ஒரு விவசாயி. பாலைகுடலூரில் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, பரணிகா தடகளத்தில் ஈடுபட்டார். ஆரம்ப காலக்கட்டத்தில் பரணிகா ரன்னிங் ரேஷ் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்றார். சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் பரணிகா இளங்கலைப் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, கம்பம் தாண்டும் வீரர்களைத் தேடிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில், பரணிகா தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சியாளர் மில்பர் பெர்ட்ரான்ட் ரஸ்ஸலிடம் கம்பம் தாண்டுதலின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.

எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரியில் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த பிறகு, பயிற்சியாளர் மார்ட்டின் ஓவன்ஸின் வேண்டுகோளின் பேரில், பரணிகா கடந்த 2022 டிசம்பர் மாதம் ஒடிசா ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தடகள உயர் செயல்திறன் மையத்தில் சேர்ந்தார். அங்கு அவரது ஆட்டம் ஒரு சர்வதேசத் தரத்தைப் பெற்றது.

2018-ல் அகில இந்திய பல்கலைக்கழக அளவில் 3.80 மீட்டர் தாண்டி போட்டி சாதனை படைத்த பிறகு, 2023-ல் இந்திய கிராண்ட் பிரிக்ஸ் 4 போட்டியில் 4.10 மீட்டர் தாண்டி சர்வதேசத் தரத்தை எட்டினார். இருப்பினும், புவனேஸ்வர் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் 3.80 மீட்டரைத் தாண்டத் தவறியதால், ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனாலும், 2026-ல் பரணிகா குறிப்பிடத்தக்க திறமையை வெளிப்படுத்தினார். மார்ச் 2026-ல், புவனேஸ்வரில் நடைபெற்ற தேசிய உள்ளரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி, ரோஸி மீனா பால்ராஜின் தேசிய சாதனையை முறியடித்து, உள்ளரங்கப் பிரிவில் முதல் தேசிய சாம்பியன் ஆனார்.

2026ம் ஆண்டு மே மாதம், கலிங்கா மைதானத்தில் பரணிகா தனது சாதனையை 4.23 மீட்டராக மேம்படுத்தினார். மேலும், சென்னையில் நடந்த இந்திய ஓபன் மற்றும் ராஞ்சியில் நடைபெற்ற 29வது தேசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 4.10 மீட்டர் தாண்டி இரண்டு தங்கப் பதக்கங்களையும் வென்றார். இப்போது, ​​நகோயா அரங்கில் 4.15 மீட்டர் தாண்டி வெண்கலத்தை வென்று, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ALSO READ: இந்தியாவிற்கு மற்றொரு வெள்ளி தஞ்சம்.. ஓடோடி பெற்று கொடுத்த குல்வீர் சிங்!

முதல்வர் விஜய் வாழ்த்து:


ஆசிய விளையாட்டுப் போட்டியில், கோல் ஊன்றித் தாண்டும் (Pole Vault) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பரணிகா இளங்கோவனுக்கு வாழ்த்துகளுடன், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகையையும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

Follow Us