AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Asian Games 2026: படையெடுக்கும் தங்கம், வெள்ளி, வெண்கலம்.. இந்தியா இதுவரை வென்ற பதக்க எண்ணிக்கை!

2026 Asian Games India Medal Tally: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை 2 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களைப் பெற்றுள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் இந்தியர்கள் சிறப்பாக செயல்பட்டு 10 பதக்கங்களை வென்றனர். கபடியில் இந்தியா தங்கம் வெல்லும் வாய்ப்புள்ளது. கடந்த 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை விட இந்த ஆண்டு அதிக பதக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Asian Games 2026: படையெடுக்கும் தங்கம், வெள்ளி, வெண்கலம்.. இந்தியா இதுவரை வென்ற பதக்க எண்ணிக்கை!
இந்திய தடகள அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Sep 2026 16:19 PM IST

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (2026 Asian Games) இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன. இதுவரை, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் 2 தங்கப் பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 9 வெண்கலப் பதக்கங்கள் (bronze medal) உட்பட மொத்தம் 19 பதக்கங்களை வென்றுள்ளது. இருப்பினும், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விளையாட்டு வீரர்கள் பல விளையாட்டுகளில் பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி ஆகிய இரண்டிலும் இந்தியா தங்கப் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவ்விரண்டிலும் இந்தியா நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: அதிர்ஷ்டவசமாக அணியில் இடம்பிடித்த ரோஷிபினா தேவி.. இன்று ஹாட்ரிக் பதக்கம் வென்று சாதனை..

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். இந்தப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட 10 பதக்கங்களை வென்றது. இருப்பினும், ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்ட மனு பாகர் இந்த முறை பதக்கம் வெல்லத் தவறினார். மனு பாகர் ஒரு தங்கப் பதக்கம் வெல்வார் என்று நாடு எதிர்பார்த்திருந்தது. கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா சாதனை அளவாக 106 பதக்கங்களை வென்றது. இந்த ஆண்டு பதக்கங்களின் எண்ணிக்கை கடந்த முறையை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: ஆசிய விளையாட்டு போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணியில் இந்தியாவுக்கு தங்கம்..

இந்தியர்கள் இதுவரை வென்ற பதக்கங்களின் அட்டவணை:

  • இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி – தங்கம்
  • துப்பாக்கி சுடுதல் (சுருசி இந்தர் சிங் மற்றும் கமல்ஜீத்)  – தங்கம்
  • துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் (இளவேனில்)- வெள்ளி
  • துப்பாக்கி சுடுதல் பெண்கள் 10 மீ ஏர் ரைபிள் அணி (இளவேனில், சோனம் மஸ்கர், விதர்ஷா வினோத்)- வெள்ளி
  •  10 மீ ரைபிள் அணி (ருத்ராக்ஷ் பாட்டீல், ஷோட் மேன்) -வெள்ளி
  • துப்பாக்கி சுடுதல் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் (ஹிமான்ஷு தில்லான்)- வெள்ளி
  • பளு தூக்குதல் பெண்களுக்கான 49 கிலோ(மீராபாய் சானு) – வெள்ளி
  • வுஷு பெண்களுக்கான 60 கிலோ சண்டா (நௌரெம் ரோஷிபினா தேவி)- வெள்ளி
  • துப்பாக்கி சுடுதல் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபில் (ருத்ராக்ஷ் பாட்டீல்) – வெள்ளி
  •  ஏர் ரைஃபில் (மகேஷ் ரல்லி ப்ஹில், மகேஷ்வா) – வெண்கலம்
  • ஷூட்டிங் ஸ்கீட்/ஷாட்கன் டீம் (சௌஹான்) – வெண்கலம்
  • ஷூட்டிங் ஆண்கள் ஸ்கீட் அணி (அனந்த்ஜீத் சிங் நருகா, பவ்தேக் சிங் கில், மைராஜ் அகமது கான்)- வெண்கலம்
  • டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் (ஜெய் மீனா சாஃப்ட்)- வெண்கலம்
  •  பேட்மிண்டன் (இந்தியன் பேட்மிண்டன் ஆண்கள் அணி)- வெண்கலம்
  • ஆண்கள் இரட்டையர் ஸ்கல் (சத்னம் சிங் மற்றும் சல்மான் கான் ரோயிங்)-  வெண்கலம்
  • அத்லெடிக்ஸ் பெண்கள் 10,000மீ (சீமா) – வெண்கலம்
  • வுஷு பெண்கள் 60கிலோ சண்டா (ரோஷிபினா தேவி) – வெண்கலம்
  • கலப்பு தற்காப்புக் கலைகள் பெண்கள் பாரம்பரியம் (சுசிகா தரியல்)- வெண்கலம்
  • துப்பாக்கிச் சுடுதல் கலப்பு அணி 10மீ ஏர் பிஸ்டல் (கமல்ஜீத், சுருச்சி சிங்) – தங்கம்
  •  துப்பாக்கிச் சுடுதல் ஆண்கள் 50மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் அணி (ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர், ருத்ராக்ஷ் பாட்டீல், நீரஜ் குமார்)- வெள்ளி

Follow Us