AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Asian Games: ஆசிய விளையாட்டு போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணியில் இந்தியாவுக்கு தங்கம்..

Asian Games 2026 - Gold Medal: சுருச்சி சிங் மற்றும் கமல்ஜீத் இணைந்து 484.6 புள்ளிகள் குவித்ததன் மூலம் ஆசிய சாதனையையும் முறியடித்தனர். முன்னதாக, இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் 481.3 புள்ளிகள் பெற்று படைத்திருந்த சாதனையை இந்திய ஜோடி முறியடித்துள்ளது.

Asian Games: ஆசிய விளையாட்டு போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணியில் இந்தியாவுக்கு தங்கம்..
கமல்ஜீத் - சுருச்சி சிங்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Sep 2026 10:04 AM IST

செப்டம்பர் 25, 2026: ஜப்பானின் ச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிப் பிரிவில் இந்தியாவின் சுருச்சி சிங் மற்றும் கமல்ஜீத் தங்கப் பதக்கம் வென்றனர். இதன் மூலம் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 2-வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி 484.6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. தென் கொரியா 478 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், ஈரான் 415.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றன. இந்தோனேசியா 349.4 புள்ளிகளுடன் போட்டியில் இருந்து வெளியேறியது.

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற சுருச்சி சிங் மற்றும் கமல்ஜீத்:

சுருச்சி சிங் மற்றும் கமல்ஜீத் இணைந்து 484.6 புள்ளிகள் குவித்ததன் மூலம் ஆசிய சாதனையையும் முறியடித்தனர். முன்னதாக, இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் 481.3 புள்ளிகள் பெற்று படைத்திருந்த சாதனையை இந்திய ஜோடி முறியடித்துள்ளது. மேலும், இந்தியாவின் இறுதிப் புள்ளிகள் உலக சாதனையைவிட 4 புள்ளிகள் மட்டுமே குறைவாக இருந்தன.

மேலும் படிக்க: அதிர்ஷ்டவசமாக அணியில் இடம்பிடித்த ரோஷிபினா தேவி.. இன்று ஹாட்ரிக் பதக்கம் வென்று சாதனை..

இறுதிப்போட்டியின் தொடக்கத்திலேயே இந்திய ஜோடி 103 புள்ளிகள் பெற்று முன்னிலை பெற்றது. 2-வது சுற்றில் 99.4 புள்ளிகளையும், 3-வது சுற்றில் 101.1 புள்ளிகளையும் பெற்று தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. 2-வது கட்டத்தின் முதல் சுற்றில் 61.2 புள்ளிகள் பெற்று தென் கொரியாவைவிட 5.8 புள்ளிகள் முன்னிலை பெற்றனர். இறுதிச்சுற்றிலும் முன்னிலையை தக்கவைத்து தங்கத்தை கைப்பற்றினர்.

 19 பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்:

இதற்கு முன்னதாக, இலங்கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்றிருந்தது. இதன்மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்தியா 2 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் அணிப் பிரிவில் ஏபிஎஸ் தோமர், ருத்ராங்க்ஷ் பாட்டீல், நீரஜ் குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். தனிநபர் இறுதிப்போட்டியிலும் தோமர், நீரஜ் பங்கேற்க உள்ளனர்.

மேலும் படிக்க: ஆசிய விளையாட்டுப் போட்டி – இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்.. தமிழக வீரர்கள் விஷால் தென்னரசு, வித்தியா ராம்ராஜ் அசத்தல்

டேபிள் டென்னிஸில் தியா சிட்டாலே, மனுஷ் ஷா கலப்பு இரட்டையர் காலிறுதியில் ஹாங்காங் ஜோடியை வீழ்த்தி இந்தியாவுக்கு பதக்கம் உறுதி செய்தனர். ஸ்குவாஷில் ஜோஷனா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார் இணையும் காலிறுதியில் வெற்றி பெற்று பதக்கத்தை உறுதி செய்தது.

நீச்சலில் சாஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்ஃபிளை இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பேட்மிண்டனில் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ கலப்பு இரட்டையர் பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். அதேநேரத்தில், வாள் சண்டை, கேனோயிங், டேபிள் டென்னிஸ், நீச்சல் உள்ளிட்ட சில பிரிவுகளில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேற முடியாமல் வெளியேறினர்.

Follow Us