ஆசிய விளையாட்டுப் போட்டி – இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்.. தமிழக வீரர்கள் விஷால் தென்னரசு, வித்தியா ராம்ராஜ் அசத்தல்
India Wins Relay Silver : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் கிடைத்துள்ளது. தடகள விளையாட்டுக்களில் கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்திய அணியில் பூவம்மா மச்செத்திரா, விஷால் தென்னரசு, வித்தியா ராம்ராஜ் மற்றும் மனு தேக்கின்னாலில் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் கிடைத்துள்ளது. தடகள விளையாட்டுக்களில் கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்திய அணியில் பூவம்மா மச்செத்திரா, விஷால் தென்னரசு, வித்தியா ராம்ராஜ் மற்றும் மனு தேக்கின்னாலில் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் விஷால் தென்னரசு மற்றும் வித்யா ராம்ராஜ் ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்
இந்த போட்டியில் இறுதி சுற்றில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஓடி 3:14.46 நிமிடங்களில் இலக்கை எட்டினர். இதன் மூலம் இந்தியா வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றது. மற்றொரு பக்கம் பஹ்ரைன் அணி 3:12.87 நிமிடங்களில் பந்தயத்தை நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றது. வியட்நாம் அணி 3:14.54 நிமிடங்களில் இலக்கை கடந்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.
இதையும் படிக்க : அதிர்ஷ்டவசமாக அணியில் இடம்பிடித்த ரோஷிபினா தேவி.. இன்று ஹாட்ரிக் பதக்கம் வென்று சாதனை..




தமிழக வீரர்கள் விஷால், வித்யா
இந்தியாவின் வெற்றியில் தமிழகத்தைச் சேர்ந்த விஷால் தென்னரசு மற்றும் வித்தியா ராம்ராஜ் முக்கிய பங்கு வகித்தனர். வித்யா ராம்ராஜின் தந்தை லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில், சிறுவயது முதலே வித்யா விளையாட்டில் ஆர்வம் காட்டியுள்ளார். அவரது இரட்டை சகோதரி நித்யாவும் தடகள வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. துவக்கத்தில் ஹாக்கி விளையாடி வந்த வித்யா பின்னர் தடகளத்தின் பக்கம் திரும்பினார். கடந்த 2023 ஆம் ஆண்டு 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 வினாடிகளில் இலக்கை எட்டி, பி.டி. உஷாவின் சாதனையுடன் சமன் செய்திருந்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான விஷால் தென்னரசுவும் பல்வேறு சவால்களை கடந்து தடகளத்தில் முன்னேறியவர். சிறுவயதில் அவரது கால்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நடப்பதற்கே சிரமம் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தந்தை பால் பண்ணை தொழிலில் ஈடுபட்டு வந்தார். மகனின் உடல்நலப் பிரச்னையை சரிசெய்யும் நோக்கில் அவரை மைதானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்து தடகளத்தில் ஆர்வம் ஏற்பட்ட நிலையில், விஷால் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு இந்திய அணியில் இடம்பிடித்தார்.
இதையும் படிக்க : Team India: கில் மிகவும் அதிர்ஷ்டசாலி.. ரோஹித் – கோலியை குறித்து கம்பீர் கூறியது என்ன?
இந்த 2026 ஆண்டு மே மாதம் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டத்தில் 44.98 வினாடிகளில் இலக்கை எட்டி தனது திறமையை நிரூபித்திருந்தார். தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வெல்லும் அணியில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்புடன் இந்திய கலப்பு தொடர் ஓட்ட அணி வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. தமிழர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.