AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Asian Games 2026: இந்தியாவிற்கு மற்றொரு வெள்ளி தஞ்சம்.. ஓடோடி பெற்று கொடுத்த குல்வீர் சிங்!

Gulveer Singh wins Silver: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 10,000மீ ஓட்டத்தில் குல்வீர் சிங் 28:29.38 நிமிடங்களில் வெள்ளிப் பதக்கம் வென்றார். உ.பி.யைச் சேர்ந்த இந்த ராணுவ வீரர், 2023 ஆசிய விளையாட்டிலும் வெண்கலம் வென்றவர். காமன்வெல்த் விளையாட்டுகளிலும் பதக்கம் வென்றுள்ளார். சர்வதேச தடகளத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த குல்வீரின் இந்த வெற்றி, இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையை 23 ஆக உயர்த்தியுள்ளது.

Asian Games 2026: இந்தியாவிற்கு மற்றொரு வெள்ளி தஞ்சம்.. ஓடோடி பெற்று கொடுத்த குல்வீர் சிங்!
குல்வீர் சிங்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Sep 2026 19:57 PM IST

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் (2026 Asian Games) ஆடவர் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் 28:29.38 நிமிடங்களில் இலக்கைக் கடந்து, தடகள வீரர் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார் . 28 வயதான குல்வீர், உத்தரப் பிரதேசத்தின் அத்ரௌலி கிராமத்தைச் சேர்ந்தவர். இதற்கு முந்தைய 2023 ஆசிய விளையாட்டில் இதே போட்டியில் குல்வீர் சிங் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். ஆடவர் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் குல்வீர் சிங் 28:29.38 நேரத்தில் ஓடி இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்த போட்டியில் பஹ்ரைனைச் சேர்ந்த பிர்ஹானு பலேவ் 28:27.51 நேரத்தில் ஓடி தங்கப் பதக்கத்தை (Gold Medal) வென்றார். ஆல்பர்ட் கிப்டூ 28:34.38 நேரத்தில் ஓடி 3ம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ALSO READ: ஒருநாள் போட்டியில் சாதனையை வலுவாக்கும் ரோஹித், கோலி.. எட்டமுடியாத ரெக்கார்ட்டும் ரெடி!

இந்த ஆண்டு நடைபெற்ற 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் குல்வீர் சிங் 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 5,000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது சிறப்பான ஆட்டங்களால் சர்வதேச தடகளப் போட்டிகளில் தனக்கென ஒரு இடத்தை குல்வீர் சிங் நிலைநிறுத்தியுள்ளார். 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 5,000 மற்றும் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் குல்வீர் சிங் தங்கப் பதக்கங்களை வென்றார்.

யார் இந்த குல்வீர் சிங்..?


குல்வீர் சிங் 1988-ம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். குல்வீர் சிங் ஸ்போர்ட்ஸ் கோட்டாவின் மூலம் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு, குல்வீர் சிங் கிரெனேடியர்ஸ் படைப்பிரிவில் பணியமர்த்தப்பட்டு, இறுதியில் இளநிலை ஆணையர் அதிகாரி பதவிக்கு உயர்ந்தார். ராணுவ விளையாட்டு நிறுவனத்தில், குல்வீர் சிங் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய முகாமில் பங்கேற்றார். அங்குதான் குல்வீர் சிங் தொழில்முறை ஓட்டப்பந்தயம் பற்றி அறியவும் அதன் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளவும் தொடங்கினார்.

ALSO READ: ஆசிய விளையாட்டு போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணியில் இந்தியாவுக்கு தங்கம்..

இதுவரை மொத்தம் 23 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா:

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், குல்வீர் சிங் தடகளத்தில் இந்தியாவின் 22வது பதக்கத்தையும், அதைத் தொடர்ந்து 23வது பதக்கத்தையும் வென்றார். மகளிர் கோல் தாண்டுதல் போட்டியில் பரனிகா எலங்கோவன் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியா இதுவரை 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. முதல் தங்கப் பதக்கத்தை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வென்றது. இரண்டாவது தங்கப் பதக்கத்தை இன்று அதாவது 2026 செப்டம்பர் 25ம் தேதி துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கமல்ஜீத் மற்றும் சுருச்சி சிங் ஜோடி வென்றது. இந்தியா இதுவரை 9 வெள்ளி மற்றும் 12 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

Follow Us