Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மகளிர் பிரீமியர் லீக்

மகளிர் பிரீமியர் லீக்

மகளிர் பிரீமியர் லீக் (WPL) என்பது இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட ஒரு முக்கிய T20 லீக் ஆகும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (BCCI) ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டி, மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு உலகளாவிய தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. WPL ஆண்கள் இந்தியன் பிரீமியர் லீக்கை (IPL) மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது மற்றும் பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக நிரூபிக்கப்படுகிறது. மகளிர் பிரீமியர் லீக் மார்ச் 2023 இல் தொடங்கியது. இதன் முதல் சீசன் மார்ச் 4 முதல் மார்ச் 26, 2023 வரை நடைபெற்றது. இந்தியா முழுவதும் ஐந்து நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்த லீக்கில் பங்கேற்கும் அணிகள் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, UP வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ். மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனை மும்பை இந்தியன்ஸ் வென்றது, இரண்டாவது சீசனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.

Read More

WPL 2026: மகளிர் பிரீமியர் லீக் போட்டி டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

WPL 2026 Tickets: மகளிர் பிரீமியர் லீக்கிற்கு ரூ.100 விலையில் டிக்கெட்டுகள் மட்டுமே ஆன்லைனில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. முதலில், மகளிர் பிரீமியர் லீக் வலைத்தளம் அல்லது ஜொமாட்டோவின் டிஸ்டிக் இணையதள பக்கத்திற்கு செல்லவும். நீங்கள் ஒரு டிக்கெட் பகுதியைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்தால் அனைத்து போட்டிகளின் பட்டியல் தோன்றும்.

WPL 2026: கடைசி நிமிடத்தில் அடுத்தடுத்து மாற்றங்கள்! மகளிர் பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் 5 அணிகளின் முழு விவரம்!

Women's Premier League Squads List: 2026ம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக்கில் இருந்து ஆர்சிபி நட்சத்திரம் எலிஸ் பெர்ரியும் விலகியுள்ளார். அதேநேரத்தில், டெல்லி கேபிடல்ஸ் வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்டும் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்க முடியாது. யுபி வாரியர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தாரா நோரிஸும் விலகியுள்ளார்.

WPL 2026: 67 வீராங்கனைகள்.. 5 அணிகளில் ஐக்கியம்.. நடந்து முடிந்த 2026 மகளிர் பிரீமியர் லீக் மெகா ஏலம்!

WPL 2026 Auction Sold Players List: 2026ம் ஆண்டுக்கான மெகா ஏலத்தில் தீப்தி சர்மா, மேக் லானிங் மற்றும் லாரா வோல்வார்ட் போன்ற குறிப்பிடத்தக்க பெயர்கள் உட்பட பல முக்கிய வீராங்கனைகளுக்கு போட்டி நிலவியது.  மகளிர் பிரீமியர் லீக் 2026 மெகா ஏலத்தில் மொத்தம் 276 வீராங்கனைகள் பங்கேற்று, இதில் 67 வீராங்கனைகள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

WPL 2026: ஜனவரி 9 முதல் மகளிர் பிரீமியர் லீக்.. அதிரடியாக வெளியான அட்டவணை..!

WPL 2026 Schedule: இந்தியாவில் 2025 ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு, மகளிர் பிரீமியர் லீக் இன்னும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. கடந்த மகளிர் பிரீமியர் லீக்கின் கடைசி 3 சீசன்களாக இந்த போட்டி மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதாவது 2023ம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.

WPL Auction 2026: டெல்லியில் இன்று மெகா ஏலம்.. மகளிர் பிரீமியர் லீக்கில் படையெடுக்கும் வீராங்கனைகள்!

TATA WPL Auction 2026: மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் பிற்பகல் 3:30 மணிக்கு புது தில்லியில் தொடங்குகிறது. மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் ஊகங்கள் இருந்தபோதிலும், BCCI இன்னும் ஐந்து அணிகளுக்கு மேல் விரிவுப்படுத்தவில்லை. அதன்படி, தொடக்க சீசன் முதல் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், UP வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் மட்டுமே லீக்கில் பங்கேற்கும்.

WPL 2026: 2026 மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் எப்போது தொடக்கம்..? வெளியான தகவல்..!

Women's Premier League 2026: பிசிசிஐ மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளை நடத்துவது தொடர்பான இடங்கள் குறித்து விவாதித்து வருகிறது. இருப்பினும், அணி உரிமையாளர்களுக்கு இன்னும் இதுகுறித்தான தகவல் தெரிவிக்கப்படவில்லை. வருகின்ற 2025 நவம்பர் 27 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தின் போது ஐந்து அணிகளுக்கும் இடங்கள் குறித்து தெரிவிக்கப்படும்.