WPL 2026: இன்று தொடங்கும் மகளிர் பிரீமியர் லீக்.. போட்டி எங்கு..? எப்போது தொடங்குகிறது?
WPL Live Streaming 2026: மகளிர் பிரீமியர் லீக்கின் நான்காவது சீசன் இரட்டை ரவுண்ட்-ராபின் வடிவத்தில் நடைபெறும். அதாவது 5 அணிகளும் லீக் கட்டத்தில் ஒருவருக்கொருவர் இரண்டு முறை மோதும். ஒவ்வொரு அணியும் லீக் கட்டத்தில் எட்டு போட்டிகளில் விளையாடும். புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL 2026) நான்காவது சீசனானது இன்று அதாவது 2026 ஜனவரி 9ம் தேதி முதல் தொடங்குகிறது. இதன் இறுதிப் போட்டியானது அடுத்த மாதம் 2026 பிப்ரவரி 5ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக்கில் 2 முறையான சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், ஒரு முறை சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bengaluru), டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் UP வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் மோதும். முன்னதாக, 2026 மகளிர் பிரீமியர் லீக் சீசனுக்கான மெகா ஏலம் 2025 நவம்பர் 27ம் தேதி நடைபெற்றது. இந்த ஏலத்தைத் தொடர்ந்து, விளையாடும் 5 அணிகள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தநிலையில், மகளிர் பிரீமியர் லீக்கின் தொடக்க நாளில் எந்த அணிகள் விளையாடும், எந்த சேனல்கள் மற்றும் மொபைல் ஆப்களில் நேரடி ஒளிபரப்பைப் பார்க்கலாம் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
WPL 2026ன் முதல் போட்டியில் யார் யார் மோதுகிறார்கள்..?
5️⃣ Captains 🫡
1️⃣ Iconic Backdrop 🤩#TATAWPL 2026 Awaits ⏳#KhelEmotionKa pic.twitter.com/VuBw4PWDxY
— Women’s Premier League (WPL) (@wplt20) January 7, 2026
WPL 2026ன் முதல் போட்டியில் இன்று அதாவது 2025 ஜனவரி 9ம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறும். 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக்கை இரண்டு முறை வென்றுள்ளது. அதேநேரத்தில், 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு முறை கோப்பையை வென்றது.




நேரடி போட்டிகளை எப்போது, எங்கே பார்ப்பது?
WPL 2026 போட்டியின் நேரடி போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். மொபைல் பயனர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் ஆப் மற்றும் வலைத்தளத்தில் நேரடி போட்டிகளை காண்லாம். மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு தொடங்கும்.
ALSO READ: நாளை முதல் மகளிர் பிரீமியர் லீக்.. எப்போது யார் மோதுகிறார்கள்? முழு அட்டவணை இதோ!
WPL 2026 வடிவம்:
மகளிர் பிரீமியர் லீக்கின் நான்காவது சீசன் இரட்டை ரவுண்ட்-ராபின் வடிவத்தில் நடைபெறும். அதாவது 5 அணிகளும் லீக் கட்டத்தில் ஒருவருக்கொருவர் இரண்டு முறை மோதும். ஒவ்வொரு அணியும் லீக் கட்டத்தில் எட்டு போட்டிகளில் விளையாடும். புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகளும் பிளேஆஃப்களுக்குத் தகுதி பெறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகள் ஒரு எலிமினேட்டர் போட்டியில் விளையாடும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் அட்டவணையில் முதலிடம் பிடிக்கும் அணியை எதிர்கொள்ளும்.