WPL 2026: மகளிர் பிரீமியர் லீக் போட்டி டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
WPL 2026 Tickets: மகளிர் பிரீமியர் லீக்கிற்கு ரூ.100 விலையில் டிக்கெட்டுகள் மட்டுமே ஆன்லைனில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. முதலில், மகளிர் பிரீமியர் லீக் வலைத்தளம் அல்லது ஜொமாட்டோவின் டிஸ்டிக் இணையதள பக்கத்திற்கு செல்லவும். நீங்கள் ஒரு டிக்கெட் பகுதியைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்தால் அனைத்து போட்டிகளின் பட்டியல் தோன்றும்.
மகளிர் பிரீமியர் லீக்கின் நான்காவது பதிப்பு (WPL 2026) வருகின்ற 2026 ஜனவரி 9 முதல் 2026 பிப்ரவரி 5 வரை நடைபெறும். 5 அணிகளுக்கு இடையே மொத்தம் 22 போட்டிகள் நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்திலும், வதோதராவில் உள்ள பரோடா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்திலும் நடைபெறும். இந்தநிலையில், இந்த சீசனுக்கான போட்டி டிக்கெட்டுகள் ஆன்லைனில் தற்போது கிடைத்து வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், மகளிர் பிரீமியர் லீக்கில் ஒரு போட்டிக்கான விலை வெறும் ரூ.100 இல் இருந்து தொடங்குகிறது. அந்தவகையில், இதற்கான டிக்கெட்டுகள் எங்கே கிடைக்கிறது? இதை எப்படி முன்பதிவு செய்ய முடியும் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
மகளிர் பிரீமியர் லீக் 2026:
மகளிர் பிரீமியர் லீக் 2026 அட்டவணை 2025 நவம்பர் 29 அன்று வெளியிடப்பட்டது. இதன் முதல் போட்டியானது 2026 ஜனவரி 9ம் தேதி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்தில் நடைபெறும். அதைத் தொடர்ந்து, 2026 ஜனவரி 10ம் தேதி 2 போட்டிகள் நடைபெறும். முதல் போட்டியில் UP வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயும், இரண்டாவது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயும் நடைபெறும். அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ரூ.100 இல் இருந்து தொடங்குகின்றன.




WPL 2026 போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை எங்கே முன்பதிவு செய்வது?
மகளிர் பிரீமியர் லீக்கின் WPL.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலோ அல்லது official District.in website வலைத்தளத்திலோ மற்றும் செயலியிலோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
WPL 2026 போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு செய்வது?
மகளிர் பிரீமியர் லீக்கிற்கு ரூ.100 விலையில் டிக்கெட்டுகள் மட்டுமே ஆன்லைனில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. முதலில், மகளிர் பிரீமியர் லீக் வலைத்தளம் அல்லது ஜொமாட்டோவின் டிஸ்டிக் இணையதள பக்கத்திற்கு செல்லவும். நீங்கள் ஒரு டிக்கெட் பகுதியைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்தால் அனைத்து போட்டிகளின் பட்டியல் தோன்றும்.
- மகளிர் பிரீமியர் லீக் டிக்கெட் விற்பனைக்கான வலைதளத்திற்கு சென்று டிக்கெட் முன்பதிவு விருப்பத்தை க்ளின் செய்யவும்.
- அடுத்த நீங்கள் ஸ்டாண்டுகளின் புகைப்படத்தைக் காண்பீர்கள்.
- டிக்கெட்டுகள் கிடைக்கும் வண்ணமயமான ஸ்டாண்டுகளை பார்க்கலாம்.
- உங்களுக்குப் பிடித்த ஸ்டாண்டைக் கிளிக் செய்யவும்.
- பின்னர் உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
- உங்கள் எண்ணில் ஒரு OTP வரும், அதை நீங்கள் சரிபார்த்து பதிவிடவும்.
- பின்னர் நீங்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
WPL 2026 அணிகள்
டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ்.
ALSO READ: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா? நிர்வாகம் வெளியிட்ட அதிரடி பதிவு!
மகளிர் பிரீமியர் லீக் வெற்றியாளர்களின் பட்டியல்
- 2023 – மும்பை இந்தியன்ஸ்
- 2024 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
- 2025 – மும்பை இந்தியன்ஸ்