Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs NZ: கில் விளையாடுவாரா? பும்ராவுக்கு ஓய்வா? நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிப்பு?

IND vs NZ ODI Series: 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். ஹர்திக் பாண்ட்யா மற்றும் பும்ரா கடந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 2 ஒருநாள் தொடர்களையும் தவறவிட்டனர்.

IND vs NZ: கில் விளையாடுவாரா? பும்ராவுக்கு ஓய்வா? நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிப்பு?
இந்திய கிரிக்கெட் அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Jan 2026 14:41 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து (IND vs NZ) இடையிலான ஒருநாள் தொடர் வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் நாளை மறுதினம் அதாவது 2026ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி ஆன்லைன் கூட்டத்தை நடத்தி அணியைத் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அறிக்கையின்படி, பிசிசிஐ வட்டாரம் ஒன்று, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி ஆன்லைன் கூட்டத்தை நடத்த உள்ளது. அதில், ஒருநாள் தொடருக்கான அணி இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்திய கேப்டன் கில் திரும்புவாரா..?

தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்குப் பிறகு முதல் முறையாக களத்தில் காணப்படவுள்ள விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்த ஒருநாள் தொடரில் மீண்டும் களமிறங்குவார்கள். கழுத்து காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா தொடரைத் தவறவிட்ட சுப்மன் கில், நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் அணிக்கு கேப்டனாகத் திரும்புவார். பார்ம் அவுட் காரணமாக 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார்.

ஷ்ரேயாஸ் ஐயர்:

ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் களம் காணுவாரா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஏனெனில், ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் விளையாடுவதற்கு பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்திலிருந்து அனுமதி பெறவில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் குறைந்தது இன்னும் ஒரு வாரமாவது மருத்துவ மேற்பார்வையில் இருப்பார். இதன் காரணமாக, ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் தொடரை கூட தவறவிடக்கூடும்.

ஹர்திக்-பும்ராவுக்கு ஓய்வா..?

2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் . ஹர்திக் பாண்ட்யா மற்றும் பும்ரா கடந்த 2 ஒருநாள் தொடர்களையும் தவறவிட்டனர். 2026 டி20 உலகக் கோப்பை நெருங்கும் போது ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உடற்தகுதிக்கு முன்னுரிமை அளிக்க அணி நிர்வாகம் விரும்புகிறது.

ALSO READ: இந்தியா vs நியூசிலாந்து 3வது ஒருநாள் போட்டி.. மாணவருக்கு சிறப்பு சலுகை அளித்த பிசிசிஐ!

அதேநேரத்தில், தற்போது விஜய் ஹசாரே டிராபியில் உத்தரபிரதேசம் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் துருவ் ஜூரெலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. விஜய் ஹசாரே டிராபியின் நான்கு இன்னிங்ஸ்களில் ஜூரெல் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் உள்பட 324 ரன்கள் எடுத்துள்ளார். இதுமட்டுமின்றி, கர்நாடகா அணிக்காக விளையாடும் தேவ்தத் படிக்கலும் தொடர்ந்து 4 சதங்கள் அடித்து சிறப்பான பார்மில் உள்ளார்.