ஜெர்மனியின் பிரேமன் நகரில் மனதை நெகிழச் செய்யும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கிரேட் கார்மோரண்ட் எனப்படும் கருப்பு நிற கடற்பறவை ஒன்று, தனது அலகில் மீன் தூண்டில் சிக்கிய நலையில், வலியில் துடித்தபடி மருத்துவமனை கதவைத் தட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேமனில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கதவுக்குச் சென்று அந்தப் பறவை தொடர்ந்து அலகால் கண்ணாடி கதவைத் தட்டிக் கொண்டிருந்தது.