AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 உலகக்கோப்பையில் முதன்முறையாக பதிவான 3 சதங்கள்.. புதிய சாதனை!!

T20 World Cup: 20 ஓவர் உலகக் கோப்பையில் சதம் விளாசிய 2-வது பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பை பர்ஹான் பெற்றார். ஏற்கனவே 2014-ம் ஆண்டில் வங்காளதேசத்துக்கு எதிராக அகமது ஷேசாத் சதம் அடித்திருந்தார். 102 ரன் வித்தியாசத்தில் நமீபியாவை சுருட்டிய பாகிஸ்தானுக்கு 20 ஓவர் உலகக் கோப்பையில் மெகா வெற்றியாக இது அமைந்தது.

T20 உலகக்கோப்பையில் முதன்முறையாக பதிவான 3 சதங்கள்.. புதிய சாதனை!!
ஒரே உலகக்கோப்பையில் 3 சதங்கள்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 Feb 2026 09:05 AM IST

2026 டி20 உலகக் கோப்பை போட்டியானது மூன்று தனிநபர் சதங்களை கொண்ட முதல் ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடராக மாறியுள்ளது. முன்னதாக, நான்கு டி20 உலகக் கோப்பை தொடர்கள் (2010, 2014, 2016 மற்றும் 2022) தலா இரண்டு சதங்களைக் கொண்டிருந்தன. 20 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் கொழும்பில் உள்ள சிங்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த 35-வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி, நமீபியாவை சந்தித்தது.

இதையும் படிக்க : Kuldeep Yadav: பாண்ட்யாவுடன் வாக்குவாதம்! சூர்யாவிடம் இருந்து விலகல்.. குல்தீப் யாதவுக்கு என்ன பிரச்சனை?

பாகிஸ்தான் அபார வெற்றி:

பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றமாக ஷகீன் ஷா அப்ரிடி, அப்ரார் அகமது நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கவாஜா நபேய, சல்மான் மிர்சா சேர்க்கப்பட்டனர். டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் முதலில் பேட் செய்தது. சஹிப்சதா பர்ஹான் தனது அபாரமான விளையாட்டின் மூலம் கடைசி ஒவரில் தனது சதத்தை நிறைவு செய்தார். இது சர்வதேச 20 ஓவர் போட்டியில் அவரது முதல் சதமாகும். 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய நமிபியா அணியால் பாகிஸ்தானை சமாளிக்க முடியவில்லை. இதனால், பாகிஸ்தான் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒரே உலகக்கோப்பையில் 3 சதங்கள்:

நடப்பு 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் முதல் சதத்தை இலங்கையின் பதும் நிசாங்கா (100 ரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) அடித்தார். அவரைத் தொடர்ந்து, இரண்டாவது சதத்தை கனடாவின் யுவராஜ் சம்ரா (110 ரன், நியூசிலாந்துக்கு எதிராக) அடித்தார். தற்போது பாகிஸ்தானின் சஹிப்சதா பர்ஹான் (100 ரன், நமீபியாவுக்கு எதிராக) ஆகியோர் சதம் அடித்துள்ளனர். அதிக சதங்கள் (3) அடிக்கப்பட்ட உலகக் கோப்பை இதுவாகும். இதற்கு முன்பு எந்த உலகக் கோப்பை தொடரிலும் 2 சதத்துக்கு மேல் அடிக்கப்பட்டதில்லை. மொத்தத்தில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை 14 சதங்கள் பதிவாகி உள்ளன.

இதையும் படிக்க : Kuldeep Yadav: பாண்ட்யாவுடன் வாக்குவாதம்! சூர்யாவிடம் இருந்து விலகல்.. குல்தீப் யாதவுக்கு என்ன பிரச்சனை?

சதம் விளாசிய 2வது பாக்., வீரர்:

20 ஓவர் உலகக் கோப்பையில் சதம் விளாசிய 2-வது பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பை பர்ஹான் பெற்றார். ஏற்கனவே 2014-ம் ஆண்டில் வங்காளதேசத்துக்கு எதிராக அகமது ஷேசாத் சதம் அடித்திருந்தார். 102 ரன் வித்தியாசத்தில் நமீபியாவை சுருட்டிய பாகிஸ்தானுக்கு 20 ஓவர் உலகக் கோப்பையில் மெகா வெற்றியாக இது அமைந்தது. இதற்கு முன்பு 2009ம் ஆண்டு உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக 82 ரன் வித்தியாசத்தில் வென்றதே சிறந்த வெற்றியாக இருந்தது.