சரிவிலிருந்து மீட்ட ஷிவம் துபே – நெதர்லாந்துக்கு எதிராக இந்தியா 193 ரன்கள் குவிப்பு
India vs Netherlands : நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் அபிஷேக் சர்மா மீண்டும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்துள்ளது.
நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் அபிஷேக் சர்மா மீண்டும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தொடர்ந்து மூன்றாவது முறையாக டக் அவுட் ஆகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்த சம்பவம் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இன்னிங்ஸின் முதல் ஓவரில் ஆர்யன் தத் வீசிய பந்தில் அபிஷேக் சர்மா போல்டாகி வெளியேறினார்.
தொடர்ந்து 3 முறை டக் அவுட்
முதல் இரண்டு பந்துகளை நம்பிக்கையுடன் எதிர்கொண்ட அவர், மூன்றாவது குறுகிய பந்தை புல் அடிக்க முயன்றபோது பந்து நேராக ஸ்டம்பை தாக்கியது. இதனால் அபிஷேக் சர்மா மீண்டும் ரன்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இந்த தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக டக் அவுட் ஆனவர்களின் பட்டியலில் அபிஷேக் சர்மா இணைந்துள்ளார். இதற்கு முன் 2010–2016 காலகட்டத்தில் ஆஷிஷ் நெஹ்ரா 2009 ஆண்ட்ரே ஃபிளெட்சர், 2024 ஆம் ஆண்டு ரோஜர் முகாசா ஆகியோர் தொடர்ச்சியாக 2 முறை டக் அவுட்டாகி வெளியேறினர்.




இதையும் படிக்க : Kuldeep Yadav: பாண்ட்யாவுடன் வாக்குவாதம்! சூர்யாவிடம் இருந்து விலகல்.. குல்தீப் யாதவுக்கு என்ன பிரச்சனை?
ஷிவம் துபே அரை சதம் அடித்தது குறித்து பிசிசிஐ பதிவு
A crucial fifty and in super quick time 🔥
Shivam Dube gets to his half-century in just 2️⃣5️⃣ deliveries 👏
Updates ▶️ https://t.co/SdXngdnwKB#TeamIndia | #T20WorldCup | #MenInBlue | #INDvNED | @IamShivamDube pic.twitter.com/mcDSwh6kNQ
— BCCI (@BCCI) February 18, 2026
மேலும், 2026 ஆண்டில் டி20 சர்வதேச போட்டிகளில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக முறை டக் அவுட் ஆன தொடக்க வீரர்களின் பட்டியலிலும் அபிஷேக் இணைந்துள்ளார். இந்த ஆண்டில் அவர் ஏற்கனவே ஐந்து முறை டக் அவுட்டாகியுள்ளார். இந்த போட்டியில் இந்திய அணியில் இஷான் கிஷன், திலக் வர்மா, ஹார்திக் பாண்ட்யா, சிவம் துபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோர் இடம் பெற்றனர். அபிஷேக் சர்மாவின் சமீபத்திய மோசமான ஆட்டம் இந்திய அணிக்கு கவலை அளித்தாலும், அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிக்க : Shahid Afridi : மருமகன் மீதும் விமர்சனம்.. பாகிஸ்தான் தோல்வியால் கடுப்பான ஷாஹித் அஃப்ரிடி!
ஒரு பக்கம் இந்திய அணியின் இஷான் கிஷன் திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் என இந்திய அணி வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், அதிரடியாக ஆடிய ஷிவம் துபே 25 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஹர்திக் பாண்ட்யாவுடன் ஜோடி சேர்ந்த அவர் பந்துகளை 4 புறமும் சிதரடித்தார். கடைசி ஓவரில் ஷிவம் துபே 66 ரன்கள் எடுத்திருந்தத போது சிக்சர் அடிக்க முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் இந்திய அணி 20 அவர்கள் முடிவில் 193 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கவுள்ளது.
.