AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup : தொடர்ந்து டக் அவுட்டாகும் அபிஷேக் சர்மா – சூப்பர் 8ல் அவரது நிலைமை என்ன?

Abhishek Sharma Form : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சமீபத்திய போட்டிகளில் குறைந்த ரன்களில் அவுட் ஆகி வரும் நிலையில், அணி நிர்வாகம் பெரிதாக கவலைப்பட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Feb 2026 12:38 PM IST
அபிஷேக் சர்மா கடந்த ஆறு இன்னிங்ஸ்களில் நான்கு முறை டக் அவுட் ஆகியுள்ளார். அதில் இரண்டு முறை இந்த உலகக்கோப்பை டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். இதற்கிடையில் வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக நமீபியா அணிக்கு எதிரான ஒரு போட்டியிலும் அவர் விளையாடவில்லை.

1 / 5
இடது கை ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா, ஆரம்பத்தில் இருந்து சிக்சர், பவுண்டரிகளாக அடிப்பது அவரது ஸ்டைல். இதனால் அவர் கடந்த 18 போட்டிகளில் டி20 சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். ஆனால் சமீபத்திய இன்னிங்ஸ்களில் அதே அதிரடியாக ஆட முயன்று தனது விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகிறார். இதனால் அவர் வருகிற சூப்பர் 8 போட்டிகளில் அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

2 / 5
இந்த நிலையில் இதுகுறித்து பதிலளித்த இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், டி20 போன்ற அதிவேக ஃபார்மட்களில் குறைந்த ரன்களில் அவுட் ஆவது சாதாரண விஷயம். அதை தேவையற்ற அளவில் பகுப்பாய்வு செய்தால், எதிரணி அணியைவிட நாமே அதிகமாக யூகிக்க ஆரம்பித்து விடுகிறோம் என்றார்.

3 / 5
மேலும் அவர் கூறுகையில், அபிஷேக் உடல்நலக்குறைவு ஏற்படுவதற்கு முன்பு அதிரடியாக ஆடி நல்ல ரன்கள் எடுத்தார். டி20 போட்டிகளில் 10 பந்துகளில் 30 ரன்கள் எடுப்பதும் முக்கியமானது. அவர் நல்ல ஃபார்மில் உள்ளார். அவருக்கு தெளிவான திட்டமும் மனநிலையும் இருக்கிறது. அதுவே எங்களுக்கு முக்கியம் என்றார்.

4 / 5
மேலும் ஒன்று அல்லது இரண்டு தோல்விகள் காரணமாக ஆட்டமுறையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. சூழ்நிலை மற்றும் மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப திட்டங்கள் மாறும் என கோடக் குறிப்பிட்டார்.

5 / 5