AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kuldeep Yadav: பாண்ட்யாவுடன் வாக்குவாதம்! சூர்யாவிடம் இருந்து விலகல்.. குல்தீப் யாதவுக்கு என்ன பிரச்சனை?

Indian Cricket Team: பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்க வந்தபோது, ​​குல்தீப் யாதவ் அவர் மீது கோபம் கொண்டார். இதன்மூலம், குல்தீப் தன்னை நடத்திய விதத்தில் அதிருப்தி அடைந்திருப்பது தெளிவாக தெரிந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

Kuldeep Yadav: பாண்ட்யாவுடன் வாக்குவாதம்! சூர்யாவிடம் இருந்து விலகல்.. குல்தீப் யாதவுக்கு என்ன பிரச்சனை?
குல்தீப் யாதவ் வாக்குவாதம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Feb 2026 14:57 PM IST

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026ல் (2026 T20 World Cup) கடந்த 2026 பிப்ரவரி 15ம் தேதி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இதில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) 61 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் போது, ​​ஸ்டேடியத்தில் நடந்த ஒரு விஷயம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போட்டியின் போது, ​​இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடையே சூடான வாக்குவாதம் காணப்பட்டது. பாகிஸ்தான் இன்னிங்ஸின் நடுவில், ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் பவுண்டரி லைனில் ஒரு கேட்சை தவறவிட்டபோது இந்த சம்பவம் நடந்தது. கேட்சை தவறவிட்ட பிறகு ஹர்திக் குல்தீப் மீது கோபம் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ: தோல்விக்கு காரணம் இதுதான் – பாகிஸ்தான் கேப்டன் சொன்ன ரீசன்ஸ்!

வாக்குவாதம்:


போட்டிக்குப் பிறகு, ஹார்திக் பாண்ட்யா குல்தீப் யாதவை ஆக்ரோஷமாக திட்டியதாகவும்,குல்தீப் யாதவும் பதிலடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது இருவருக்கும் இடையே சிறிதுநேரம் ஒரு சிறிய வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. போட்டியின் போது, ​​ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் குல்தீப் யாதவ் ஒரு கேட்சை தவறவிட்டார். இதனால், பந்து எல்லைக் கோட்டைத் தாண்டிச் சென்று சிக்ஸருக்குச் சென்றது. ஹர்திக் வெளிப்படையாகவே திட்டினார். இதற்கிடையில், ரிங்கு சிங் குறுக்கிட்டு ஹர்திக்கை சமாதனப்படுத்தி மறுபக்கத்திற்கு அழைத்துச் சென்றார்.

ALSO READ: மருமகன் மீதும் விமர்சனம்.. பாகிஸ்தான் தோல்வியால் கடுப்பான ஷாஹித் அஃப்ரிடி!

சூர்யகுமார் யாதவும் மீது கோபம்:

போட்டிக்குப் பிறகு இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்க வந்தபோது, ​​குல்தீப் யாதவ் அவர் மீது கோபம் கொண்டார். இதன்மூலம், குல்தீப் தன்னை நடத்திய விதத்தில் அதிருப்தி அடைந்திருப்பது தெளிவாக தெரிந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இது இந்திய அணி டிரஸ்ஸிங் ரூமில் எல்லாம் நன்றாக இருக்கிறதா என்பது குறித்து ஒரு சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது. இருப்பினும், இந்த சம்பவம் நடந்த ஒரு நாளுக்கு பிறகு, சூர்யகுமார் யாதவ் மற்றும் குல்தீப் யாதவ் மீது தங்கள் செயலை தாங்களே கிண்டல் செய்வது போல் வீடியோவை எடுத்து ரீக்ரியேட் செய்து வெளியிட்டனர். இதுவும் தற்போது வைரலாகி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் போன்ற பல முக்கியமான போட்டிகள் வீரர்கள் மீது மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, வெற்றிக்கான உந்துதல் பெரும்பாலும் மைதானத்தில் இதுபோன்ற சிறிய வாக்குவாதத்தை வழிவகுக்கும் என கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்தனர்.