IndvsSA : 2024 உலகக்கோப்பை ஃபைனல் நியாபகம் இருக்கா? 11 ஆண்டு போராட்டம் – என்ன நடந்தது?
T20 World Cup 2024 Final Review : 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஃபைனலில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை (Worldcup) போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்திய அணி லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் வருகிற பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெறவிருக்கும் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியனான இந்திய அணி கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி உலகக் கோப்பை வென்றது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஜூன் 29, 2024 அன்று இங்கிலாந்து போர்டோஸின் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிபோட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
2024 உலகக்கோப்பை ஃபைனலில் என்ன நடந்தது?
அந்த போட்டியில் என்ன நடந்தது என விவரமாக பார்க்கலாம். டாஸ் வென்ற அப்போதைய இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த நிலையில் அந்த அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா 9 ரன்களுடன் ரிஷப் பந்த் ரன்கள் எதுவும் எடுக்காமலும், சூர்யகுமார் யாதவ் 3 ரன்களுடனும் எடுத்து வெளியேறினர். இதனால் ஒரு கட்டத்தில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையும் படிக்க : 5 கேட்சுகள் மிஸ்.. கைகொடுத்த துபே.. நெதர்லாந்து போட்டியில் இந்தியாவின் ஆட்டம் எப்படி?
இந்த நிலையில் அப்போது களமிறங்கிய விராட் கோலி பொறுப்புடன் விளையாடி 59 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். அவருடன் கைகோர்த்த அக்சர் படேல் 47 ரன்கள் அடிக்க, இருவரும் சேர்ந்து இணைந்து 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே 27 ரன்கள் அடிக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு ஜஸ்பிரித் பும்ரா ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். ரீசா ஹென்றிக்ஸை 4 ரன்களில் வெளியேற்றினார். அதனைத் தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் கேப்டன் எய்டன் மார்க்கரமை அவுட் செய்தார். இதனால் அந்த அணி 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பிறகு குவின்டன் டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணைந்து 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அக்சர் படேல் ஸ்டப்ஸை அவுட் செய்து இருவரது பார்ட்னர்ஷிப்பை பிரித்தார்.
இதையும் படிக்க : ஆணவத்துல ஆடக்கூடாது.. தொடர்ந்து சரியும் ஆஸ்திரேலியா.. போட்டோவை வைரல் செய்யும் ரசிகர்கள்!
இந்த நிலையில் ஹென்ரிச் கிளாசன் அரை சதம் அடித்து ஆட்டத்தின் போக்கை தென்னாப்பிரிக்கா பக்கம் திருப்பினார். இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா 17வது ஓவரில் கிளாசனை அவுட் செய்து இந்தியாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். மற்றொரு பக்கம் பும்ரா தன் பங்குக்கு மார்கோ ஜான்சனின் விக்கெட்டை வீழ்த்தி அந்த அணிக்கு அழுத்தத்தை அதிகரித்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பாண்ட்யா வீசிய பந்தில் டேவிட் மில்லர் அடித்த பந்தை சூர்யகுமார் யாதவ் அபாரமாக கேட்ச் பிடித்து போட்டியை இந்தியாவின் வசம் கொண்டு வந்தார். 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹர்திக் பாண்ட்யா அபாரமாக செயல்பட்டார்.


