AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Yuvraj Samra Record: நியூசிலாந்துக்கு எதிராக சதம்! 19 வயது கனடா வீரர் குவித்த சாதனைகள்.. யார் இந்த யுவராஜ் சாம்ரா?

Who is Canada Cricketer Yuvraj Samra: எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய கனடா தேர்வு செய்தது. யுவராஜ் சாம்ராவும், கேப்டன் தில்ப்ரீத் பஜ்வாவும் முதல் விக்கெட்டுக்கு சதம் அடித்தனர். அணியின் முதல் விக்கெட் 116 ரன்களில் சரிந்தது. கேப்டன் பஜ்வா 39 பந்துகளில் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் யுவராஜ் சாம்ரா நிலையாக நின்று சதமடித்தார்.

Yuvraj Samra Record: நியூசிலாந்துக்கு எதிராக சதம்! 19 வயது கனடா வீரர் குவித்த சாதனைகள்.. யார் இந்த யுவராஜ் சாம்ரா?
யுவராஜ் சாம்ராImage Source: ICC/Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Feb 2026 16:33 PM IST

2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) 31வது போட்டியில் இன்று அதாவது 2026 பிப்ரவரி 17ம் தேதி எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நியூசிலாந்து மற்றும் கனடா அணிகள் மோதின. இந்தபோட்டியில், நியூசிலாந்துக்கு எதிரான இளம் வீரர் யுவராஜ் சாம்ரா அபார சதத்தை அடித்து 19 வருட வரலாற்றை முறியடித்தார்ர். இதன்மூலம், யுவராஜ் சாம்ரா (Yuvraj Samra) தற்போது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சதம் அடித்த இளைய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். நியூசிலாந்து அணிக்கு எதிராக 65 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 110 ரன்கள் எடுத்தார். இந்தநிலையில், சதம் அடித்த யுவராஜ் சாம்ரா படைத்த சாதனைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் அடுத்தடுத்து டக் அவுட்.. மோசமான சாதனை படைத்த அபிஷேக் சர்மா!

எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய கனடா தேர்வு செய்தது. யுவராஜ் சாம்ராவும், கேப்டன் தில்ப்ரீத் பஜ்வாவும் முதல் விக்கெட்டுக்கு சதம் அடித்தனர். அணியின் முதல் விக்கெட் 116 ரன்களில் சரிந்தது. கேப்டன் பஜ்வா 39 பந்துகளில் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் யுவராஜ் சாம்ரா நிலையாக நின்று சதமடித்தார். இருப்பினும், நியூசிலாந்து போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, சூப்பர் 8 இல் தங்கள் இடத்தை உறுதி செய்தது.

யுவராஜ் சாம்ரா யார்?

யுவராஜ் சாம்ரா செப்டம்பர் 29, 2006 அன்று பிறந்தார். அதன்படி, 19 வயதே ஆன யுவராஜ் சாம்ராவுக்கு கனடா தேசிய அணிக்காக 8 ஒருநாள் போட்டிகள் மற்றும் 18 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இடது கை பேட்ஸ்மேன் இவர். 10 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடி 267 ரன்கள் எடுத்துள்ளார். பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மிகவும் பிடிக்கும் என்பதால் தனது மகனுக்கு யுவராஜ் சாம்ரா என்று பெயரிட்டதாக அவரது தந்தை ஒரு நேர்காணலில் கூறினார்.

ALSO READ: மருமகன் மீதும் விமர்சனம்.. பாகிஸ்தான் தோல்வியால் கடுப்பான ஷாஹித் அஃப்ரிடி!

சதமடித்த யுவராஜ் சாம்ரா படைத்த சாதனைகள்:

  • டி20 உலகக் கோப்பையில் மட்டுமல்ல, எந்த ஐசிசி போட்டியிலும் சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையை யுவராஜ் சாம்ரா பெற்றுள்ளார். யுவராஜ் 19 வயது 141 நாட்களில் சதம் அடித்தார். முன்னதாக, கடந்த 2011 உலகக் கோப்பையில் 20 வயது 196 நாட்களில் சதம் அடித்த அயர்லாந்து அணியின் தற்போதைய கேப்டன் பால் ஸ்டிர்லிங்கின் சாதனையை அவர் முறியடித்தார்.
  • ஐ.சி.சி போட்டியில் சதம் அடித்த முதல் 20 வயதுக்குட்பட்ட வீரர் என்ற பெருமையை யுவராஜ் சாம்ரா பெற்றுள்ளார்.
  • டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையும் யுவராஜ் சாம்ராவுக்கு உண்டு. 2016 டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக சதம் அடித்த பாகிஸ்தானின் அகமது ஷெஹ்சாத்தின் சாதனையை அவர் முறியடித்தார். அப்போது அவருக்கு வயது 22 வயது மற்றும் 127 நாட்கள் ஆகும்.
  • ஐசிசி அங்கீகாரம் பெறாத அசோசிடேட்டட் அணியை சேர்ந்த வீரர் டி20 உலகக் கோப்பையில் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.