WPL 2026: கடைசி நிமிடத்தில் அடுத்தடுத்து மாற்றங்கள்! மகளிர் பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் 5 அணிகளின் முழு விவரம்!
Women's Premier League Squads List: 2026ம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக்கில் இருந்து ஆர்சிபி நட்சத்திரம் எலிஸ் பெர்ரியும் விலகியுள்ளார். அதேநேரத்தில், டெல்லி கேபிடல்ஸ் வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்டும் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்க முடியாது. யுபி வாரியர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தாரா நோரிஸும் விலகியுள்ளார்.
ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக 2026 மகளிர் பிரீமியர் லீக்கிற்கான (Women’s Premier League 2026) கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. இந்த போட்டியானது வருகின்ற 2026 ஜனவரி 9ம் தேதி தொடங்க உள்ளது. 2026 மகளிர் பிரீமியர் லீக் சீசனின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிகளுக்கு இடையே நடைபெறும். இருப்பினும், பல நட்சத்திர வீராங்கனை இந்த முக்கிய போட்டியில் பங்கேற்க இருந்தநிலையில், கடைசி நிமிடத்தில் தங்கள் பெயர்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதன் காரணமாக, மகளிர் பிரீமியர் லீக்கில் பல அணிகள் கடைசி நிமிடத்தில் சில மாற்றங்களை செய்துள்ளனர். அதன்படி, எலிஸ் பெர்ரி உட்பட பல நட்சத்திர வீராங்கனை மகளிர் பிரீமியர் லீக்கிலிருந்து விலகிவிட்டனர்.
ALSO READ: 2026ம் ஆண்டுக்கான வங்கதேச சுற்றுப்பயணம்.. இந்திய அணியின் அட்டவணை வெளியீடு!
எந்தெந்த வீராங்கனைகள் பங்கேற்க மாட்டார்கள்..?
2026ம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக்கில் இருந்து ஆர்சிபி நட்சத்திரம் எலிஸ் பெர்ரியும் விலகியுள்ளார். அதேநேரத்தில், டெல்லி கேபிடல்ஸ் வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்டும் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்க முடியாது. யுபி வாரியர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தாரா நோரிஸும் விலகியுள்ளார். சதர்லேண்டிற்கு பதிலாக ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் அலனா கிங்கை டெல்லி அணி சேர்த்துள்ளது. இதற்கிடையில், பெர்ரியின் அணியில் ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் சாய்லி சத்காரேவை சேர்த்துள்ளது. மேலும், நோரிஸுக்கு பதிலாக ஆஸ்திரேலிய பேட்டிங் ஆல்ரவுண்டர் சார்லி நாட்டை உபி அணி சேர்த்துள்ளது.




ஐந்து அணிகளின் தற்போதைய அணி விவரம்:
மும்பை இந்தியன்ஸ்:
நடாலி ஸ்கீவர், ஹர்மன்பிரீத் கவுர், ஹெய்லி மேத்யூஸ், அமன்ஜோத் கவுர், ஜி கமாலினி, அமெலியா கெர், ஷப்னிம் இஸ்மாயில், சமஸ்கிருதி குப்தா, ரஹிலா பிர்தௌஸ், சஜீவன் சஜ்னா, நிக்கோல் கேரி, சயேகா இஷாக், திரிவேணி ரெட்டி, ஐயான் கிஹ்ம், போயோன் ரெட்டி, போயோன்.
UP வாரியர்ஸ்:
ஸ்வேதா செஹ்ராவத், தீப்தி ஷர்மா, சோஃபி எக்லெஸ்டோன், மெக் லானிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், கிரண் நவ்கிரே, ஹர்லீன் தியோல், கிராந்தி கவுட், ஆஷா ஷோபனா, டியாண்ட்ரா டோட்டின், ஷிகா பாண்டே, சோலி டைரோன், ஷிர்பா க்னோட்டிகா, சிம்ரன் க்னோட்டிகா, சிம்ரன் க்னோட்டிகா ராவல்.
டெல்லி கேபிடல்ஸ்:
ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷெஃபாலி வர்மா, அலனா கிங், மரிசானே கப், நிக்கி பிரசாத், லாரா வால்வார்ட், சினெல்லே ஹென்றி, ஸ்ரீ சரணி, ஸ்னே ராணா, லிசெல் லீ, தியா யாதவ், தன்யா பாட்டியா, நந்தினி ஷர்மா, மம்தா மடிவாலா, மம்தா மடிவாலா.
குஜராத் ஜெயண்ட்ஸ்:
ஆஷ்லீக் கார்ட்னர், பெத் மூனி, சோஃபி டிவைன் (வெளிநாட்டு), ரேணுகா சிங், பார்தி ஃபுல்மாலி, டிடாஸ் சாது, அனுஷ்கா சர்மா, தனுஜா கன்வர், காஷ்வி கெளதம், ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், யாஸ்திகா பாட்டியா, ஹேப்பி குமாரி, ஷிவானி சிங், அயுஷி கானி, அயுஷி கானி, ஷிவானி சிங்.
ALSO READ: 3 உலகக் கோப்பைகள்.. ஆசிய விளையாட்டு போட்டிகள்.. இந்திய ஆடவர், மகளிர் அணிகளின் அட்டவணை!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், சயாலி சத்கரே, ஸ்ரேயங்கா பாட்டீல், ஜார்ஜியா வோல், நாடின் டி கிளர்க், ராதா யாதவ், லாரன் பெல், லின்சி ஸ்மித், பிரேமா ராவத், பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, தயாளன் ஹேமலதா, பிரேஸ்யா குமார், கௌத்ராமி, க்ரேஸ்.